கவுண்டமணி ஹீரோவாக நடித்த 5 திரைப்படங்கள்.. மார்க்கெட் இழந்ததால் ஜோடி போட்ட ஹீரோயின்

கவுண்டமணி காமெடி நடிகராக பின்னி பெடல் எடுப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான். ஆனால் ஹீரோவாகவும் கவுண்டமணி சில படங்களில் நடித்துள்ளார். காமெடி கை கொடுத்த அளவுக்கு கவுண்டமணிக்கு ஹீரோயிசம் கை கொடுக்கவில்லை. அப்படி ஹீரோவாக நடித்த கவுண்டமணியின் 5 படங்களை பார்க்கலாம்.

ராஜா எங்க ராஜா : முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்ட ராஜா எங்க ராஜா என்ற படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அப்போது மார்க்கெட் இழந்த காரணத்தினால் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்தில் செந்தில், மனோரமா போன்றோரும் நடித்திருந்தனர்.

Also Read : கவுண்டமணி, செந்தில் சேர்ந்து நடித்த முதல் படம்.. கரகாட்டக்காரனுக்கு முன்னரே பட்டையை கிளப்பிய காமெடி

ஒரு நல்லவன் ஒரு வல்லவன் : ராம நாராயணன் இயக்கத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த படம் ஒரு நல்லவன் ஒரு வல்லவன். இந்த படத்தில் கவுண்டமணி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒருவர் குதிரை வண்டி வைத்திருப்பவராகவும், மற்றொருவர் காவல் அதிகாரியாகவும் நடித்தார்.

பிறந்தேன் வளர்ந்தேன் : விஜயசிங்கம் இயக்கத்தில் கவுண்டமணி, செந்தில், ஜீவிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிறந்தேன் வளர்ந்தேன். இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். கவுண்டமணியின் பிறந்தேன் வளர்ந்தேன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also Read : கவுண்டமணியால் அனைத்தையும் தொலைத்த நடிகை.. இன்று வரை வாய்ப்பு கிடைக்காத அவலம்.!

49 ஓ : ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த 2015 இல் வெளியான திரைப்படம் 49 ஓ. அரசியலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் கவுண்டமணியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது : கணபதி பாலமுருகன் இயக்கத்தில் கவுண்டமணி, சௌந்தர்ராஜ், ரித்விகா மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படத்தில் கவுண்டமணி கேரவன் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

Also Read : கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு.. ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்