ஒரே ஹீரோவுக்கு ஆசைப்படும் இரண்டு நடிகைகள்.. தரமான சம்பவம் செய்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்தவகையில் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ஒரு நடிகர் மீது ஆசைபடும் படி நிறைய படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட 5 படங்களை பார்க்கலாம்.

வல்லவன் : சிலம்பரசன், நயன்தாரா, ரீமாசென், சந்தியா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லவன். இப்படத்தில் சிம்பு தன்னை விட வயதில் மூத்த நயன்தாராவை காதலிக்கிறார். ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்த நயன்தாரா அதன் பிறகு சிம்புவை நேசிக்கிறார். அப்போது சிம்புவின் முன்னாள் காதலி ரீமாசென் என்ட்ரி வருகிறது. பின்பு யாருடன் சிம்பு இணைகிறார் என்பதே வல்லவன் படத்தில் கதை.

பில்லா : விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நமீதா, நயன்தாரா நடிப்பில் 2007இல் வெளியான திரைப்படம் பில்லா. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நயன்தாரா மற்றும் நமிதா இருவரும் நடித்த அசத்து இருந்தனர். மேலும் இப்படத்தின் வெற்றிக்கு இவர்கள் இருவரும் முக்கிய காரணம்.

ஆயிரத்தில் ஒருவன் : செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தின் கதையை முன்னோக்கி எடுத்துச் சொல்லும் கதாபாத்திரத்தில் இரண்டு நடிகைகளும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை இவர்களது நடனமும் வரவேற்பை பெற்றது.

என் ஜி கே : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் என் ஜி கே. இப்படம் அரசியலில் இளைஞர்களின் வெற்றியை பற்றியது. இப்படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடித்திருந்தனர். இப்படத்தில் சூர்யா இரண்டு நடிகைகளுடன் காதலும் ரசிக்கும்படி இருந்தது.

காத்துவாக்குல 2 காதல் : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இரண்டு நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் இரண்டு நடிகைகளுடனும் காதல் வயப்படுகிறார் விஜய் சேதுபதி.

 

Next Story

- Advertisement -