தனது அடுத்த படத்திற்காக ரகுல் ப்ரீத்தி சிங் பாக்ஸிங் கற்றுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் எடையை குறைத்து வெறித்தனமாக பாக்ஸிங் விளையாடும் ராகுல் ப்ரீத்தி சிங்யை பார்த்து வாயடைத்துப் போய் உள்ளனர் ரசிகர்கள்.
ஆத்தாடி என்ன உடம்பி.. கருப்பு உடையில் ரசிகர்களை கண்டம் பண்ணும் ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரித் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமிழ்சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம் என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது நடித்து வெளிவந்த என்.ஜி.கே திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் கவர்ந்தார்.

தற்போது கருப்பு உடையில் தனது உடல் அழகை காட்டும் வகையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கண்டம் செய்து வருகிறது.
