நடிகர்களை காதலித்து ஏமாந்த 6 ஹீரோயின்கள்.. உலக அழகியை ஓவர்டேக் செய்த நயன்தாரா!

ஒரு நடிகை எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அதில் ஏதாவது ஒரு நடிகருடன் தான் அவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அந்த வகையில் அந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

அதனால் அந்த ஜோடி அடுத்தடுத்த திரைப்படங்களில் இணைந்து நடிப்பார்கள். இதன் மூலம் சினிமாவில் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி அவர்களுக்கு நிஜ வாழ்விலும் ஒர்க்அவுட் ஆகிவிடும். அப்படி நடிகர்களை காதலித்து பிரேக் அப் செய்த நடிகைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

சினேகா புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவர்களுக்குள் உருவாகிய நட்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் இன்னும் அதிகமானது.

அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல செய்திகள் வெளியானது. ஆனால் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக இந்த ஜோடி பிரிந்தது. அதன் பிறகு சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

சிம்ரன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இடுப்பழகி சிம்ரன் சிக்காத சர்ச்சைகளே கிடையாது. அந்த அளவுக்கு இவர் குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது. அதில் ஒன்றுதான் இவருக்கும் கமலுக்கும் இருந்த நெருக்கமான உறவு. பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல வதந்திகள் பரவியது.

ஆனால் சில காலங்களுக்குப் பிறகு இந்த செய்தி அப்படியே மூடி மறைந்து போனது. அதன் பிறகு சிம்ரன் நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தை தீவிரமாக காதலித்தார். ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக அந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு சிம்ரன் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

அஞ்சலி தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்தார். ஒரே வீடு எடுத்து தங்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்த இந்த ஜோடி திருமணம் வரை சென்றார்கள். ஆனால் நடிகர் ஜெய்க்கு இருந்த குடிப்பழக்கத்தின் காரணமாக அஞ்சலி அவரை பிரேக் அப் செய்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் குடியேறிவிட்டார்.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் தமிழிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் ஐஸ்வர்யா ராய்க்கு ஏகப்பட்ட காதல் இருந்தது. அதை அவர் என்றுமே மறைத்தது கிடையாது.

முதலில் நடிகர் சல்மான் கானை காதலித்த இவர் சில காரணங்களால் அவரை விட்டுப் பிரிந்தார். அதன் பிறகு நடிகர் விவேக் ஓபராயை தீவிரமாக காதலித்தார். ஆனால் அந்த காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. அதன் பிறகு அபிஷேக் பச்சனை காதலித்த ஐஸ்வர்யா ராய் அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நயன்தாரா கோலிவுட்டில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய ஒரே நடிகை இவர்தான். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் நடிகர் சிம்புவை தீவிரமாக காதலித்தார். இவர்கள் இருவரும் வல்லவன் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்தனர். மிகவும் நெருக்கமாக பழகிய இந்த ஜோடி சில காரணங்களால் பிரிந்தது.

அதன் பிறகு நயன்தாரா, நடிகர் பிரபுதேவாவை உருகி உருகி காதலித்தார். அவருக்காக மதம் கூட மாறினார். பிரபுதேவாவும் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். திருமணம் வரை சென்ற இந்த காதல் ஜோடி எதிர்பாராத விதமாக பிரிந்தது. பின்னர் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

நக்மா 90 காலகட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் நடிகர் சரத்குமாரை காதலித்தார். ஒரு விதத்தில் சரத்குமாரின் விவாகரத்துக்கு இவர்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு நெருக்கமாக பழகி வந்த இவர்கள் மன வருத்தத்தின் காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு நக்மா தமிழ் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

பிறகு சிறிது காலம் அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர் ஒரு கிரிக்கெட் வீரருடன் காதலில் விழுந்தார். ஆனாலும் அவருக்கு அந்த காதலும் கைகூடாமல் போனது. அதனால் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

Next Story

- Advertisement -