இப்ப நீ இல்லாம போயிட்டியே ஆலியா.. விருவிருப்பான சம்பவத்தைக் கூட சொதப்பும் சந்தியா!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் படாதபாடுபட்டு பார்வதி-பாஸ்கர் திருமணம் நடந்த கையோடு தீவிரவாதிகளின் கையில் பார்வதி சிக்கிக் கொண்டு சின்னா பின்னமாகிறார். பார்வதியை வைத்துதான் சரவணனின் கடையில் செல்வம் என்ற பெயரில் வேலைக்கு சேர்ந்த தீவிரவாதி ஒருத்தன், பார்வதியை மனித வெடிகுண்டாக மாற்றி உள்ளான்.

இதனால் திருவிழா நடைபெறும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் பார்வதியின் உடம்பில் வெடிகுண்டை கட்டிவிட்டு, அவளை மயில் பொம்மை ஆட்டம் ஆடுவது போல் கூட்டத்திற்கு இடையில் அனுப்பி விடுகிறாள். ஒரு கட்டத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் பார்வதி நிலைதடுமாறி கீழே விழுவதை சந்தியா பார்த்து விடுகிறாள்.

பார்வதி காலில் அணிந்திருக்கும் புது மெட்டியை வைத்து பார்வதி தான் என முடிவெடுத்து சந்தியா, வேகமாக விரைந்து ஓடி பார்வதியை காப்பாற்ற முயற்சிக்கிறான். இருப்பினும் தீவிரவாதி கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு நடப்பதை எல்லாம் தன்னுடைய கையில் இருக்கும் கேமராவை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இதனால் பார்வதியை காப்பாற்ற வரும் சந்தியாவை அவனுடைய ஆட்களை வைத்து தடுத்து நிறுத்த முயற்சிப்பான். இருப்பினும் ஐபிஎஸ் படிக்கும் ஆசையில் வெறி கொண்டு காத்திருக்கும் சந்தியா, அவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து பார்வதியையும், பார்வதியிடம் இருக்கும் வெடிகுண்டை யும் அகற்ற போலீஸாரின் உதவியுடன் தீவிரமாக செயல்படுவாள்.

ஒருகட்டத்தில் பார்வதியின் பத்திரமாக மீட்டெடுக்கும் சந்தியா ஆசைப்படுவது போல் ஐபிஎஸ் ஆனால் தப்பில்லை என சரவணனின் தாய் புரிந்து கொள்வதற்கு இந்த சம்பவத்தை துருப்புச் சீட்டாக சரவணன் பயன்படுத்த போகிறான். எது எப்படியோ இந்த பரபரப்பான சம்பவங்களில் மட்டும் ஆலியா மானசா நடித்திருந்தால் இருந்திருந்தால் நிச்சயம் வேற லெவலில் பிச்சு உதறி இருப்பாள் என்பது சின்னத்திரை ரசிகர்களின் கருத்து.

தற்போது சந்தியாவாக நடித்துக் கொண்டிருக்கும் ரியா, ஆரம்பத்தில் நடித்த அளவிற்கு நடிப்பில் முன்னேற்றம் இல்லாமல் ஏனோ தானோ என நடிப்பதாகவும் அவரது முகத்தில் நடிப்பு அப்படியே தெரிகிறது என்றும் சிலர் சோஷியல் மீடியாவில் இந்த சீரியலை குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News