வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரோகிணி மூஞ்சியில் கரிய பூசிய ஒட்டுமொத்த குடும்பம்.. பார்லர் விஷயத்தை வைத்து மிரட்டும் முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவை அசிங்கப்படுத்தி குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி தலைகுனிய வைக்க வேண்டும் என்று ரோகினி முடிவு பண்ணினார். அதற்கேற்ற மாதிரி காரை வித்திட்டு தற்போது ஆட்டோ ஓட்டுகிறார் என்கிற விஷயத்தை விஜயா மூலம் அனைவருக்கும் தெரிய வைத்து விட்டார்.

பிறகு அண்ணாமலை ஏன் எதற்கு காரை விற்றாய். என்னிடம் கூட சொல்லவில்லை அப்படி உனக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறார். அதற்கு முத்து இது தெரிந்தால் உங்கள் மனசு ரொம்ப கஷ்டப்படும். உங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை. அதனால் இதையும் சொல்லி உங்களை மேலும் மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் தான் எல்லாத்தையும் மறைத்து விட்டேன் என்று சொல்கிறார்.

உடனே ரோகிணி, மனோஜ் வேலையில்லாத பொழுது அதை மட்டும் டிவியில எல்லாத்துக்கும் தெரியிற மாதிரி போட்டு காட்டி அவமானப்படுத்தினீர்கள். உங்க விஷயத்தை மட்டும் யாரிடமும் சொல்லாமல் கமுக்கமாக மறைத்து விட்டீர்கள் என்று முத்துவை கேள்வி கேட்கிறார். அதற்கு முத்து நான் ஒன்னும் உன்னுடைய புருஷன மாதிரி யாரையும் ஏமாற்றி பணத்தை எடுத்துட்டு போகவில்லை என்று சொல்கிறார்.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

அதற்கு விஜயா நீ என்னிடம் சொல்ல வேண்டும். ஏனென்றால் என்னுடைய வீட்டை வைத்து தான் உன்னுடைய அப்பா உனக்கு கார் வாங்கிக் கொடுத்தார். அப்படியே காரை விற்றாய் என்றால் அதற்கான பணத்தை நீ என்னிடம் கொடுத்திருக்க வேண்டும் என்று முத்துவிடம் கேட்கிறார். அதற்கு முத்து, மனோஜ் 27 லட்சத்தை எடுத்துட்டு போன பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லுங்கள்.

அடுத்த நிமிஷமே நான் கார் விற்ற காசை தருகிறேன் என்று சொல்லி அனைவரும் வாயையும் அடைத்து விடுகிறார். பிறகு முத்து இந்த விஷயத்தை எல்லாரும் முன்னாடியும் ஈசியாக சமாளித்து ரோகிணி மூஞ்சியில் கரியை பூசி விட்டார். பிறகு மீனா, முத்துவிடம் எல்லா கேள்வியும் கேட்கிறார். அதற்கு முத்து முதல்ல என்னிடம் கேள்வி கேட்பது நிப்பாட்டிட்டு உன் தம்பி என்ன பண்ணுகிறான் யாருடன் சேருகிறான் என்பதை போய் பாரு என்று குதர்க்கமாக பேசிவிட்டு போகிறார்.

அடுத்தபடியாக மீனா, முத்துவின் நண்பரிடம் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு சிட்டி-யிடம் எச்சரிக்கை செய்யப் போகிறார். அடுத்ததாக முத்து, ரோகினியை பார்த்து என்ன மாட்டி விட்டாய் என்ற சந்தோசத்தில் இருக்கிறியா? உன்னை பற்றி உண்மையே நான் எல்லோரிடமும் சொன்னால் எங்க அம்மா உன்னை கொஞ்சம் கூட மதிக்க மாட்டாங்க. நீ விஜயா பார்லருக்கு உரிமை இல்ல என்கிற விஷயம் எனக்கு தெரியும் என்று ரோகினியை பிளாக்மெயில் பண்ணுகிறார்.

Also read: ரோகினிடம் சிக்கிய முத்து, குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை.. ரவிக்கு மாமியார் கொடுக்கும் டார்ச்சர்

- Advertisement -

Trending News