Ilaiyaraja: லோகேஷ் படத்திற்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்.. சூப்பர் ஸ்டாரின் தரமான பதிலடி

Ilaiyaraja: கடந்த சில நாட்களாகவே எந்த பக்கம் திரும்பினாலும் இளையராஜா பேச்சு தான். அந்த அளவுக்கு மனுஷன் அக்க போர் செய்து வைத்திருக்கிறார். தன்னுடைய இசை எல்லா பக்கத்திலும் கொண்டாடப்படுவதை பார்த்து ரசிக்க வேண்டிய ஓய்வு காலம் தான் அவருடையது.

ஆனால் இந்த நேரத்தில் இப்படி எல்லா பாட்டும் எனக்குத்தான் சொந்தம் என இவர் உரிமை கொண்டாடுவது கொஞ்சம் அபத்தமாக தான் இருக்கிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி பட குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் இளையராஜா.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக கூலி படத்தி பார்ட்டி சாங் ஒன்று வெளியானது இதில் ரஜினி நடித்து இளையராஜா இசையமைத்த தங்க மகன் படத்தில் இருந்து வா வா பக்கம் வா படத்தின் இசை உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் பாடலின் முழு காப்புரிமை தன்னிடம் இருப்பதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தன்னுடைய பாட்டை மறு உருவாக்கம் செய்வதற்கு கூட உரிய அனுமதி பெற வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.

ரஜினி அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் நடிக்கும் படத்தின் மீது கேஸ் போட்டு இருக்கிறார். இதற்கிடையில் வேட்டையன் படபிடிப்பு முடிந்து ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் இளையராஜா சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரஜினி அது இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையேயான பிரச்சனை என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

கழுவுற மீன்ல நழுவுற மீன் பார்த்திருப்போம். அதுதான் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த ஒரு சர்ச்சையும் தனக்கு வேண்டாம் என பக்காவாக ஒதுங்கி இருக்கிறார். இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பேசிய கேபி ராஜன் ஒரு படத்தில் வரும் பாடல் காட்சிகள் என அத்தனையுமே தயாரிப்பாளருக்கே சொந்தம் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் தரப்பில் இளையராஜா மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்