Ajith and Adhik: ஆத்துல ஒருகால் சேத்துல ஒரு கால் வைத்து தள்ளாடும் அஜித்.. ஆதிக் ஆடப்போகும் கண்ணாம்பூச்சி ஆட்டம்

Ajith and Adhik: போட்டி நிறைந்த திரையுலகில் ஒருவர் கொஞ்சம் அசந்தாலும் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்து ஆக்கிரமித்து விடுவார். இது எல்லா நடிகர் நடிகைகளுக்கும் நன்றாகவே பொருந்தும். ஆனால் அஜித்துக்கு மட்டும் ஏதோ ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் இவருடைய படங்கள் தொடர்ந்து வெளிவராது.

அத்துடன் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தும் பழக்கமும் கிடையாது. எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். ரசிகர்களுக்காக ஒரு சின்ன அளவு கூட மெனக்கிட மாட்டார். இப்படி இவரைப் பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம். ஆனால் அப்படி இருக்கும் அஜித்துக்கு இப்பொழுது வரை ரசிகர்களின் மனதில் ஒய்யாரத்தில் இடம் இருக்கிறது.

அதனால் தான் எண்ணமோ நாம் என்ன பண்ணினாலும் ரசிகர்கள் கை விட மாட்டார்கள் என்று அலட்சியமாக இருக்கிறார் போல. அதாவது கடந்த வருடம் பொங்கலை ஒட்டி இவருடைய நடிப்பில் துணிவு படம் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது வரை படம் முடிந்த பாடாக இல்லை எந்தவித அப்டேட்டுமே வரவில்லை.

அஜித்துக்கு சப்போர்ட் பண்ணிய ஆதிக்

முக்கியமாக இவருடைய பிறந்த நாளுக்கு ஏதாவது ஒரு சிங்கிள் அப்டேட் ஆவது வருமா என்று ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நாள் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே முடிந்து விட்டது. இன்னும் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு முடியவில்லை. ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கு இடையில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் குட் பேட் அக்லி படத்திற்கு கமிட் ஆகிவிட்டார். தற்போது ரெண்டு படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் இப்பொழுது இவருடைய நிலைமை எப்படி இருக்கிறது என்றால் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைத்து தள்ளாடிக் கொண்டிருக்கிறார்.

அதாவது ரெண்டு படத்திற்குமே வித்தியாசமான கெட்டப்புகள் போட வேண்டியதாக இருக்கும். முக்கியமாக குட் பேட் அக்லி படத்தில் 3 கெட்டப். அதே மாதிரி விடாமுயற்சி படத்தில் இரண்டு கெட்டப் போட வேண்டியது இருக்கிறது. இதனால் மாற்றி மாற்றி அலைய முடியாமல் அஜித் ஒரு கட்டத்தில் ரொம்பவே துவண்டு போய்விட்டார்.

அஜித்தின் நிலைமையை பார்த்த ஆதிக் விடாமுயற்சி படத்திற்கு போடப்பட்ட கெட்டப் அப்படியே கொஞ்சம் குட் பேட் அக்லி படத்திற்கும் ஒத்து போகிறதாம். அதனால் அந்த கெட்டப் வைத்து எடுக்க வேண்டிய போர்சனை மட்டும் பயன்படுத்தி ஆதிக் அவருடைய கைவரிசையை காட்டி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இப்படி ஆதிக் எடுத்த இந்த முடிவால் அஜித் தற்போது பெருமூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆகி இருக்கிறார். அந்த வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பு சீக்கிரமாக முடியுதோ இல்லையோ, குட் பேட் அக்லி ஷூட்டிங்கை முடித்து ஆதிக் ரிலீஸ் பண்ணி விடுவார் போல. ஏதோ ஒன்னு ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அஜித் படம் சீக்கிரமாக வெளிவந்தால் அதுவே மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்