லோகேஷ் சுட்ட இளையராஜாவின் 4 சூப்பர் ஹிட் பாடல்கள்.. ருத்ர தாண்டவம் ஆடும் இசைஞானி!

4 super hit songs of Ilayaraja shot by Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே முன்னணி இயக்குனராக வளர்ந்து நிற்கும் லோகேஷ் கனகராஜ் அவர்கள், தான் இயக்கும் அத்தனை படங்களையும் ஹிட் ஆக்குவதில் வல்லவர் தான். 

பொதுவாக தனது திரைப்படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதையை மட்டுமே நம்பி பயணிக்கும் லோகேஷ், ஒரு சில இடங்களில் ரெட்ரோ பாடல்களை பயன்படுத்தி அதையும் ஹிட் செய்து விடுகிறார்.

இன்றைய சூழ்நிலைக்கு தக்கவாறு இளைஞர்களை தன் வசம் வைத்திருக்கும் லோகேஷ் அவர்கள், எந்த ஒரு அனுமதியும் கேட்காமலேயே இளையராஜாவின் பாடல்களை தன் படத்தில் பயன்படுத்தி வருகிறார்.   

லோகேஷ் தன் படங்களில் பயன்படுத்திய இளையராஜாவின் நாலு பாடல்கள் இதோ,

பைட் கிளப்: லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் பைட் கிளப். உறியடி விஜயகுமாரின் இயக்கத்தில் உருவான பைட் கிளப் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது.

1980 இல் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் இடம் பெற்ற “என் ஜோடி மஞ்ச குருவி” பாடல் பிஜிஎம்-ஐ பைட் கிளப் படத்தின் டீசர் முழுவதும் பயன்படுத்தி இருந்தனர்.

விக்ரம்: லோகேஷ் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற விக்ரம் என்ற பாடல் 1980 வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்பட பாடலின் மறு உருவாக்கம் ஆகும். 

கைதி: கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படத்தில், பாடல்களுக்கென தனியாக எந்த ஒரு ட்ராக்கும் பயன்படுத்தாமல், கதையின் சூழலிலேயே ஒரு சில ரெட்ரோ பாடல்களை உள் நுழைத்து இருந்தார் லோகேஷ்.

அதிலும் பாலு மகேந்திரா இயக்கத்தில் அரவிந்த்சாமி, நிழல்கள் ரவி, ரேவதி நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான “மறுபடியும்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஆசை அதிகம் வச்சு பாடலை பயன்படுத்தினார்.

விக்ரம் படத்தில் விட்டு விட்டு கூலி படத்தில் ஆப்பு அடித்த இளையராஜா 

கூலி: லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் வெளியான கூலி டீசரில் இளையராஜா இசையமைப்பில் ரஜினி நடித்த தங்கமகன் திரைப்படத்தின் “வா வா பக்கம் வா” என்ற டிஸ்கோ பாடலை பயன்படுத்தி இருந்தனர்.

இதனால் காண்டான இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களை தன்னிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல், லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் உபயோகித்து  வருவதாகவும், 

தற்போதுகூட கூலி படத்தில், தான் இசையமைத்த டிஸ்கோ பாடல் பயன்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் கேட்டு, கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்