Vijay : கோட் படத்தில் இத்தனை வில்லன்களா.? 18 வருடத்திற்கு பிறகு தளபதியுடன் மோதும் விஜய் நண்பன்

venkat prabhu-vijay
venkat prabhu-vijay

வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் கோட் படம் உருவாகி வருகிறது. விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், அர்ஜுன் என ஏக்கசக்க பிரபலங்கள் வில்லனாக நடித்திருந்தனர். அதே போல் கோட் படத்திலும் நிறைய வில்லன் நடிகர்கள் இடம்பெற இருக்கின்றனர்.

மேலும் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த படத்தில் சில காட்சிகளில் நடிக்க வைக்க உள்ளனர். மேலும் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என எக்கசக்க பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட மூன்று வில்லன்கள் நடிக்க உள்ளனர். அப்பா மற்றும் மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அப்பா விஜய்யுடன் இருக்கும் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதேபோல் அஜ்மலும் இதில் கொடூர வில்லனாக நடிக்கிறார்.

விஜய்யுடன் 18 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகர்

இந்நிலையில் திருப்பாச்சி படத்தில் நடித்த யுகேந்திரன் கோட் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இவர் இணைந்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் யுகேந்திரன் சிறந்த பாடகரும் கூட.

இவர் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்த நிலையில் இப்போது வெங்கட் பிரபு இவரை வில்லன் ஆக்கியுள்ளார். விஜய் மற்றும் யுகேந்திரன் இடையே தரமான காட்சிகள் கோட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி கோட் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் உள்ள பின்னணி வேலைகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner