சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரோகினிடம் சிக்கிய முத்து, குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை.. ரவிக்கு மாமியார் கொடுக்கும் டார்ச்சர்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய விஷயம் வெளிவரும் என்று எதிர்பார்த்தால் மற்றவர்களுடைய ரகசியமும் தான் தெரிய வருகிறது. அதாவது மனோஜ் இதுவரை சர்வர் வேலைதான் பார்த்து வந்தார் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்து விட்டது. அத்துடன் அவருக்கு அந்த வேலையும் போய்விட்டது வேறு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதும் முத்துவிற்கு தெரிந்து விட்டது.

இதை வைத்து முத்து நக்கலாக கிண்டல் அடித்து பேசும் பொழுது மனோஜ்க்கு கூடிய சீக்கிரத்தில் வேலை கிடைத்து விடும் என்று விஜயா சொல்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் உள்ளே நுழைந்து வேலை கிடைத்து விட்டது, ஆனால் அதற்கு 14 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று ஒரு குண்டை தூக்கி போட்டு விடுகிறார். இதனால் விஜயா, ரோகினிடம் உங்க அப்பாவிடம் சொல்லி அந்த காசை வாங்கி கொடு என்று டிமாண்ட் பண்ணுகிறார்.

ஆனால் இது கண்டிப்பாக ரோகிணியால் முடியாது என்பதால் இந்த வேலையும் மனோஜ்க்கு கிடைக்காமல் போய்விடும். அடுத்ததாக முத்து அவருடைய சொந்த காரை விற்று தான் நண்பருக்கு பணம் கொடுத்து உதவி செய்தார். அதன் பின் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார். ஆனால் இந்த விஷயம் குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாது.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

முக்கியமாக முத்துவின் அப்பாவிற்கு தெரியாது ஏனென்றால் அவர் ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். இந்த விஷயமும் தெரிந்து விட்டால் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என்பதால் முத்து மறைத்து விட்டார். ஆனால் ரோகிணி மற்றும் அவருடைய தோழி ஆட்டோவிற்கு வெயிட் பண்ணும் பொழுது அந்த ஆட்டோவை ஓட்டிக்கொண்டு முத்து தான் வருகிறார்.

இதனை பார்த்த ரோகினி ஏன் ஆட்டோ ஓட்டுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு முத்து ஏன் ஓட்ட கூடாதா நீங்க எங்க போனும் மட்டும் சொல்லுங்க நான் உங்களை இறக்கி விடுகிறேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனால் கண்டிப்பாக இந்த விஷயம் ரோகிணி மூலம் குடும்பத்துக்கு தெரிய வரப்போகிறது. அதன் பின் அண்ணாமலை முத்துவை கூப்பிட்டு என்ன ஆச்சு என்று கேட்கப் போகிறார். இருந்தாலும் முத்து இதையெல்லாம் சமாளித்து விடுவார்.

அடுத்தபடியாக ரோகிணியும் தான் பியூட்டி பார்லருக்கு உரிமையாளர் கிடையாது. அம்மா பெயரில் வைக்கவே இல்லை என்று முத்து சொன்ன விஷயமும் வெளிவந்தால் ரோகிணி பற்றிய உண்மையான முகம் என்னவென்று தெரியவரும். அடுத்தபடியாக ரவியை வேலை பார்க்கும் இடத்திற்கு சுருதி அம்மா போய் டார்ச்சர் கொடுக்கிறார். இதனால் ரவியின் வேலை பாதிக்கப்படுவதால் சுருதி அம்மாவை திட்டி வெளியே அனுப்பி விடுகிறார். இது சுருதிக்குத் தெரிந்தால் கண்டிப்பாக மறுபடியும் ரவியிடம் பிரச்சினை பண்ணுவார்.

Also read: முத்துவின் அப்பாவால் ரோகிணியின் முகத்திரை கிழியும் நேரம் வந்தாச்சு.. விஜயா வைக்க போகும் செக்

- Advertisement -

Trending News