ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து தற்போது ஆட்டோ தான் ஓட்டுகிறார் என்கிற விஷயம் ரோகினிக்கு தெரிந்து விடுகிறது. உடனே இதுதான் சான்ஸ், இதை வைத்தே மாமியாரிடம் பற்றவைத்து முத்துவிற்கு பிரச்சினை கொடுக்கலாம். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் முத்து மற்றும் மீனா தனிகுடித்தனம் போய்ட்டார்கள் என்றால் நமக்கு இனி பிரச்சினை வராது என்று நினைக்கிறார். அதற்காக விஜயாவிடம், முத்து காரை விற்று விட்டார். தற்போது ஆட்டோ தான் ஓட்டுகிறார் என்ற உண்மையை ரோகிணி போட்டு உடைக்கிறார். உடனே விஜயா என் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து அதன் மூலம் தான் காரை வாங்கி கொடுத்தார்.

எனக்கு தெரியாமல் அவன் எப்படி விக்கலாம். அப்படியே வித்தாலும் காசு என்னிடம் தானே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதே நேரத்தில் இதையெல்லாம் நான் கேட்டால் சரி வராது யாரை விட்டு கேட்க சொல்லனுமோ கேட்க சொல்றேன் என எல்லா விஷயத்தையும் அண்ணாமலை இடம் சொல்லிவிட்டார்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

பிறகு முத்து வந்ததும் அனைவரும் ஒன்றாக இருக்கும் பொழுது விஜயா இதைப் பற்றி கேட்கிறார். அதற்கு முத்து, ரோகிணியை பார்த்து எல்லாத்தையும் போட்டு கொடுத்துட்டியா என்று சொல்கிறார். உடனே விஜயா கார் வித்த பணத்தை எங்கே என்று கேட்கிறார். பிறகு இதை எப்படியோ முத்து சமாளித்து விடுகிறார்.

அதன் பிறகு ரோகிணியை தனியாக பார்த்து முத்து என்ன பற்றி நல்ல வத்தி வைத்து விட்டாய். அதே மாதிரி விஜயா பார்லருக்கு நீ உரிமையாளர் இல்லை, என்னுடைய அம்மா பெயரில் வைக்கவில்லை என்ற உண்மையையும் நான் சொல்லவா என்று பிளாக்மெயில் பண்ண ஆரம்பிக்கிறார். ஆக மொத்தத்தில் ரோகினி முத்துவை பற்றி தெரியாமல் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டு முழித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மீனா, முத்துவின் நண்பரிடம் நடந்த விஷயத்தை கேட்டு கார் எதனால் விற்றார் என்பதை தெரிந்து கொண்டார். பிறகு சிட்டி ஆபீசுக்கு சென்று மீனா என் புருஷனிடம் ஏதாவது வம்பு வச்சனா நடக்கிறதே வேற என்று மிரட்டுகிறார். உடனே சிட்டி எப்படியாவது மீனாவையும் முத்துவையும் பிரித்து காட்ட வேண்டும் என்று சவால் விடுகிறார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

- Advertisement -

Trending News