Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெல்ல மெல்ல தளபதி இடத்தை பிடிக்க துடிக்கும் வசூல் நடிகர்.. விஜய்க்கு கிடைக்கப்போகும் சிம்மாசனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. டாக்டர், டான் என தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றி படங்களால் தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயன் நம்பி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்து வருகிறார்.

மேலும் சிவகார்த்திகேயனும் நம்மால் எதுவும் முடியும் என்ற ஒரு பெரிய உத்வேகத்தில் உள்ளார். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் என்றால் சினிமாத்துறையில் இவரின் அபரிமிதமான வளர்ச்சி தான். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக கொண்டாடும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறியுள்ளார்.

பல பிரபலங்களும் தற்போது சிவகார்த்திகேயன் விஜய்யின் இடத்தை பிடித்துவிட்டார் என்ற சொல்வதை நம்மால் கேட்க முடிகிறது. எஸ் ஜே சூர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறுகையில் விஜய்க்கு மட்டும்தான் குடும்ப ஆடியன்ஸ் உள்ளார்கள். அவர் படம் ரிலீசாகும் போது தான் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வருவதை பார்க்க முடிகிறது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விஜய் இடத்தை தற்போது மெல்ல மெல்ல சிவகார்த்திகேயன் பிடித்து வருகிறார் என எஸ் ஜே சூர்யா கூறியிருந்தார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யா அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தான் குடும்பங்களை போற்றும் ஹீரோ என்று ஒரு பதிலைக் சொல்லியிருந்தார்.

இவ்வாறு தற்போது விஜய்யின் இடத்தை நோக்கி சிவகார்த்திகேயன் சென்று கொண்டிருக்கிறார். ஒருவர் இடத்தை மற்றொருவர் பிடிப்பது சினிமா துறையில் ஒரு சாதாரண ஒன்றுதான். கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் இடத்தை மற்றொரு நடிகர் நிச்சயம் பிடிப்பார்.

இந்நிலையில் தளபதி விஜய் தற்போது ரஜினி இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். விஜய்க்கு என்று ஒரு மாஸ் ஆடியன்ஸ் உள்ளார்கள். இவருடைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் படத்தை வசூல் ரீதியாக வெற்றி பெறச் செய்து விடுகிறார்கள். இதனால் விஜய் அவர் இருக்கும் இடத்திலிருந்தே ரஜினி இடத்திற்கு செல்வார் என கூறப்படுகிறது.

Continue Reading
To Top