thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

SK Leo

SK-க்கு அவ்வளவு அக்கறை காமிச்சீங்க, கட்டுன புருஷனுக்கு கவனிக்க தவறிய சங்கீதா..காரணம் இதுவா?

லியோ படத்தால் நடிகர் விஜய் வீட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை

nelson-lokesh

நெல்சன் நிலைமை போல் லோகேஷ்க்கு வந்த சிக்கல்.. எதையும் கண்டுகொள்ளாத பெரிய இடம்

நெல்சன் எந்த நிலைமையில் இருந்தாரோ அதே நிலைமையில் தற்போது லோகேஷும் இருக்கிறார்.

lokesh-vijay-lalith

லியோ சரிவுக்கு யார் காரணம் என்பதை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்.. லோகேஷ்-க்கு விஜய்யால் வந்த கரும்புள்ளி

லியோ படத்தைக் குறித்து வெளிப்படையாக பேசிய லலித்.

Actor Karthi

ஒன்னு இல்லன்னா இன்னொன்னு, கார்த்தி லைன் அப்பில் 3 படங்கள்.. தீபாவளிக்கு குண்டு போட வரும் ஜப்பான்

கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்து மூன்று படங்கள்.

vijay-venkat-prabhu

லியோ படத்தில் ஏற்பட்ட குளறுபடியால் வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன தளபதி 68 படக்குழு

லியோ படத்தில் ஏற்பட்ட குளறுபடியை மறக்கடிக்கும் விதமாக அதிரடி முடிவை எடுத்த விஜய்.