ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லியோ படத்தில் ஏற்பட்ட குளறுபடியால் வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன தளபதி 68 படக்குழு

Vijay to Venkat Prabhu: விக்ரம் படத்திற்குப் பிறகு சினிமாவையே புரட்டி போட்டது லோகேஷின் LCU கதை தான். அத்துடன் இந்தப் படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் அதிக வரவேற்பை கொடுத்து வசூல் அளவில் பெரிய லாபத்தை பார்த்ததால் லியோ படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பை லியோ படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் கேள்விக்குறியாக தற்போது வரை இருக்கிறது. அதற்கு காரணம் பலதரப்பட்ட மக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் விஜய்யின் ரசிகர்களும் ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறார்கள்.

ஏனென்றால் இப்படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட சொதப்பலுக்கு நிறைய நெகட்டிவ் ரிவ்யூ தொடர்ந்து வருவதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்படத்தின் ஆடியோ லாஞ்சை அதிகமாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதிலும் இவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

சரி படமாவது வெறித்தனமான வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதுவும் அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இப்படி தொடர்ந்து லியோ படத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டதால் விஜய் இதை எல்லாத்தையும் உடனே சரி செய்ய வேண்டும் என்ற முயற்சியில் வெங்கட் பிரபுவுக்கு ஒரு சில கண்டிஷன்களை போட்டிருக்கிறார்.

அந்த வகையில் வெங்கட் பிரபுவுடன் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் அதற்கான புகைப்படத்தை வருகிற ஆயுத பூஜை அன்று ரிலீஸ் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால் வெங்கட் பிரபுவும் அதற்கான வேலையில் முழு முயற்சியுடன் இறங்கி ஆயுத பூஜையில் விஜய் கேட்டுக்கொண்டபடி ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பம்பரமாக வேலை பார்த்து வருகிறார்.

ஒன்னுல விட்டத மற்றொன்றில் உடனே பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தளபதி 68 படத்தில் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக இறக்க இருக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் லியோ படத்தை மறந்து விட்டு அடுத்து தளபதி 68க்கு போர் கொடியை தூக்கிக்கொண்டு ஆரவாரப்படுத்துவார்கள் என்ற நினைப்பில் ஒவ்வொன்றையும் தந்திரமாக செயல்படுத்த இருக்கிறார்.

- Advertisement -

Trending News