சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய்யின் தங்கை எலிசாவா? மாடர்ன் உடையில் இணையத்தை தெறிக்க விடும் புகைப்படம்

vijay-Leo: விஜய் லியோ படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன் அதிக எதிர்பார்ப்பு இருப்பதற்கான காரணம் ஒன்று லோகேஷ் இயக்குவது. மற்றொன்று இந்த படத்தில் பாலிவுட் முதல் மற்ற மொழி பிரபலங்கள் என எக்கச்சக்கமானவர்கள் நடித்திருந்தார்கள்.

அந்த வகையில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும் மடோனா செபஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த சூழலில் இந்தப் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் மடோனா செபஸ்டின். இந்த படத்தின் பாடல் வெளியான போதே இவர் நடித்திருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது.

ஆனால் அவரது கதாபாத்திரம் மிகவும் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இந்நிலையில் விஜய்யுடன் ஒட்டிப் பிறந்தவராக மடோனா செபஸ்டின் நடித்திருந்தார். அதாவது எலிசா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது இவர் ஆச்சரியப்படும் அளவுக்கு மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கருப்பு நிற உடையில் ஸ்டைலாக அவர் வெளியிட்ட போட்டோக்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் தமிழில் காதலும் கடந்து போகும் போன்ற சில படங்களில் நடித்த மடோனாவுக்கு லியோ படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறது. இதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் அதிகம் வந்துள்ளனர்.

விஜய்யின் தங்கை எலிசா

madonna-sebastian
madonna-sebastian

லியோ படத்திற்குப் பிறகு மடோனா செபஸ்டினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதுவே அவரது திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைய கண்டிப்பாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். இப்போது மடோனாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்ததுடன் அதிகமாக பகிர்ந்தும் வருகிறார்கள்.

மடோனா செபஸ்டின்

madonna-cinemapettai
madonna-cinemapettai
- Advertisement -

Trending News