SK-க்கு அவ்வளவு அக்கறை காமிச்சீங்க, கட்டுன புருஷனுக்கு கவனிக்க தவறிய சங்கீதா..காரணம் இதுவா?

Vijay-Sangeetha Vijay: தளபதி விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே விஜய் வீட்டிலும் பிரச்சனை என தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. அதற்கு ஏற்ற மாதிரி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவருடைய மனைவி சங்கீதா வரவில்லை.

விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை பிரிந்து விட்டார் எனவும் விரைவில் இருவருக்கும் விவாகரத்து ஆகப் போகிறது எனவும் சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றது போல் சங்கீதாவும் லண்டனுக்கு சென்று விட்டார். இதற்கு விஜய் தரப்பிலிருந்து குழந்தைகளின் கல்விக்காக அவர் அங்கு சென்று இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் அங்கே செல்கிறார் எனவும் சொல்லப்பட்டது.

லண்டனுக்கு சென்றிருந்த சங்கீதா சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பி இருந்தார் .அப்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரிலீஸ் ஆனது. சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மாவீரன் படத்தை சென்னை வெற்றி தியேட்டரில் பார்த்த சங்கீதா மற்றும் ஆர்த்தியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இப்போது லியோ படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகப்போகிறது. சங்கீதா அந்த படத்தை பார்த்ததற்கான எந்த ஒரு புகைப்படங்களுமே வெளியாகவில்லை. இதனால் அவர் அந்த படத்தை பார்த்தாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் படத்தை தியேட்டரில் வந்து பார்த்த அவருக்கு லியோ படத்தை பார்க்க நேரம் இருக்காதா என்று கூட பேசப்படுகிறது.

விஜய் மீண்டும் த்ரிஷா உடன் இணைந்து நடித்தது அவருடைய மனைவி சங்கீதாவிற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டதுதான். இதனால் தான் விஜய், த்ரிஷா மீண்டும் இணையாமல் இருந்தார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் லியோ படத்தில் இணைந்தது தான் விஜய் வீட்டில் பிரச்சனை நடப்பதற்கு காரணம் என்று கூட சொல்லப்படுகிறது.

லியோ படத்தில் சம்பந்தமே இல்லாமல் வைக்கப்பட்ட லிப்லாக் காட்சிதான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை லோகேஷ் படத்தில் இப்படி ஒரு காட்சி வைக்கப்பட்டதே இல்லை. அதே போன்று கிட்டத்தட்ட சில வருடங்களாகவே விஜய் இது போன்ற காட்சிகளில் நடித்ததும் இல்லை. எனவே இது தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போல் தான் இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்