லியோவில் இடம்பெற்ற 3 ரெட்ரோ பாடல்கள்.. ட்ரெண்டாகும் கரு கரு கருப்பாயி

Vijay-Leo: விஜய்யின் லியோ படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்களுக்கு வைப்பை ஏற்படுத்தும் படியாக எந்த பாடலும் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதாவது லியோ படத்திற்கு போட்டியாக பார்க்கப்படுவது ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் தான். லியோ மற்றும் ஜெயிலர் இந்த இரண்டு படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

அதுவும் ஜெயிலரில் ஒரு பாடல் விஜய்யை வம்பு இழுக்கு படியாக அமைந்ததால் அந்த பாடல் மிகவும் ட்ரெண்டானது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் முதல் பாடலாக வெளியான காவாலா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. எதுவும் தமன்னா இந்த பாடலுக்கு போட்ட குத்தாட்டம் தான் வேற லெவலில் ட்ரெண்ட் ஆகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் லியோ படத்தில் அனிருத் மோசம் செய்து விட்டார் என விஜய் ரசிகர்கள் காண்டாகி திட்டி வந்தனர். இந்நிலையில் லியோ படத்திற்கு போட்ட பாடல்களை தாண்டி படத்தில் மூன்று ரெட்ரோ பாடல்கள் இடம் பெற்றிருந்தது. அதில் குறிப்பாக கருகரு கருப்பாயி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்போது ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

அதாவது பிரபுதேவா நடனத்தில் வெளியான இந்த பாடல் அப்போது விட இப்போது தான் விஜய் நடனம் ஆடிய பிறகு இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறது. மேலும் இந்த நடனத்திற்கு பிறகு மாஸ் ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது தவிர தாமரை பூவிக்கும் தண்ணிக்கும் என்ற பாடலும் லியோ படத்தின் இடம் பெற்றிருந்தது.

மேலும் கடைசியாக நான் பொல்லாதவன் என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இயக்குனர் லோகேஷ் எப்போதுமே தனது படங்களில் ரெட்ரோ பாடல்கள் வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனாலும் மாஸ் ஹீரோவுக்கு இதுவரை லோகேஷின் படங்களை இது போன்ற பழைய பாடல்கள் வைத்ததில்லை.

மேலும் விஜய்க்கு இந்த பாடல் சரியாக செட்டாகி விட்டது. பிரபுதேவாவின் பாடலுக்கு இப்போது விஜய் நடனம் ஆடிய நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான தளபதி 68 படத்தில் பிரபுதேவா தான் கோரியோகிராப் செய்திருக்கிறார். இவர்களது காம்போவில் உருவாகியுள்ள தளபதி 68 படத்தில் இடம்பெற்ற நடனம் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்