Leo Movie Collection: தளபதியின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி திரையிடப்பட்டு வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் ரிலீசான ஐந்தே நாட்களில் இந்த படம் செய்த சாதனை பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
லியோ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்தாலும், அவருடைய ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிகின்றனர். அதிலும் ஆயுத பூஜையான நேற்று எல்லா திரையரங்குகளும் ஹவுஸ் புல் தான். இதனால் நேற்று ஒரே நாளில் 70 கோடியை தட்டி தூக்கியது.
நான்கு நாட்களில் 410 கோடியை வசூலித்த லியோ ஐந்தாவது நாளில் அதிகபட்சமாக 70 கோடியை வசூலித்து ஒட்டுமொத்தமாக 480 கோடியை வசூலித்திருக்கிறது. இவ்வாறு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 500 கோடியை நெருங்கி லியோ சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை அசால்டாக முறியடிக்க போகிறது.
அது மட்டுமல்ல சில தளபதி ஹேட்டர்ஸ் லியோ ஆயிரம் கோடியை தாண்டி விட்டால் மீசையை எடுத்துக்கிறேன் என்று பகிரங்கமாக சவால் விட்டிருக்கின்றனர். ஆனால் லியோ படத்தின் வசூலை பார்த்தால் ஆயிரம் கோடி எல்லாம் எங்க தளபதிக்கு ஜூஜூபி என்று அவருடைய ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் லியோ படம் 100 கோடி வசூலை கடந்த நிலையில், இந்திய அளவில் 200 கோடி வசூலை அள்ளி அசுர சாதனையை படைத்திருக்கிறது. இந்தப் படம் என்னதான் பக்க ஆக்ஷன் படமாக இருந்து இளசுகளை அதிகமாக கவர்ந்து அவர்களை திரையரங்குகளுக்கு குவியச் செய்துள்ளது.
இந்த படத்தில் இருக்கும் ஹைனா சீன், விஜய்யின் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் இந்த படம் குடும்பத்திற்காக போராடும் கதாநாயகனின் ஸ்டோரி என்பதால் இதனை பூஜா ஹாலிடேஸில் ரசிகர்கள் குடும்பத்துடன் தியேட்டர்களில் வந்து பார்க்க விரும்புகின்றனர். இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறி கொண்டே போகிறது. இன்னும் ஒரு சில தினத்தில் ஆயிரம் கோடியை அசால்டாக தட்டி தூக்க போகிறது.