சூப்பர் ஸ்டாரே கோர்ட்டிற்கும் வீட்டிற்கும் அலைக்கழித்த 4 சம்பவங்கள்.. கறாராக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்!

1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தைத் துவங்கிய ரஜினிகாந்த், இன்றும் கதாநாயகனாகவே தன்னுடைய 71-வது வயதிலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இருப்பினும் ரஜினிகாந்த் சர்ச்சையில் சிக்கி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் நடந்த 4 சம்பவங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்ட தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, தயாரிப்பாளர் முகன்சந்த் போத்ரா (Mukanchand Bothra) என்பவரிடம் பணம் வாங்கி இருக்கிறார். அந்தப் பணத்தை அவர் கஸ்தூரி ராஜாவிற்கு கொடுக்க காரணம் ரஜினிகாந்த் மட்டுமே. ஏனென்றால் அவருடைய பெயரை வைத்துதான் கடந்த ஜூன் 2015 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா தயாரிப்பாளரிடம் இருந்து பணத்தை பெற்றிருக்கிறார். இருப்பினும் இதைப்பற்றி ரஜினிக்கு எதுவும் தெரியாமல் இருந்தாலும் தன்னிடமிருந்து அட்வான்ஸாக வாங்கிய 65 லட்சத்தை பெற்றுத்தருமாறு ரஜினிகாந்தின் மீது தயாரிப்பாளர் தொடுத்த வழக்கில் ரஜினியின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது.

இதைத்தொடர்ந்து ரஜினிக்கு ஏகப்பட்ட சினிமா வெறியர்கள் இருக்கின்றனர் என்றே சொல்லலாம். அவர்கள் ரஜினியின் படம் வெளிவந்தால் கண்ணு முன்னு தெரியாமல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்படித்தான் 2013ஆம் ஆண்டு ரஜினியின் 63-வது பிறந்த நாள் அன்று சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டி ரஜினியை வம்பில் மாட்டி விட்டனர். ஏனென்றால் அவர்கள் அடித்த கட் அவுட்டில் இந்துக் கடவுள்களான விநாயகர், விஷ்ணு ஆகியோர் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்றபடி ரஜினிக்கு  ஓட்டு போடுவது போல் சித்தரித்தனர். அதுமட்டுமின்றி அந்த போஸ்டரில், ‘தலைவா நீ அரசியலுக்கு வந்தால் ஆண்டவனும் வரிசையில் வந்து ஓட்டுப் போடுவான்’ என எழுதியிருந்தனர்.

இதனால் விஸ்வ இந்து பரிஷத் (Vishva Hindu Parishad) என்ற அமைப்பு ரஜினி மீதும் ரஜினி ரசிகர்களின் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதைப்போல் ரஜினியை முன்னிலைப்படுத்தி பாலிவுட்டில் வர்ஷா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தால் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் மீது முதன்முதலாக பிரபலம் ஒருவர் பேர்சனலிடி ரைட்ஸ் என்பதன் கீழ் ரஜினி அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டது.

அதனை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், அந்தப் படத்தை தடை செய்து, அதன் பிறகு அந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கண்டெண்ட் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டு, ஹனுமன்கர் ஜங்ஷன் (hanumangarh junction) என்ற வேறொரு பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா திரைப்படத்தின் கதை முழுவதும் ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளரை பற்றியும், அவர் கட்டிய முல்லைப்பெரியாறு அணை பற்றியும் கூறுவதாகவும், அதை ஏற்கனவே ‘முல்லை 999’ என்ற டைட்டிலுடன் கேவி ரவி ரத்தினம் என்பவர் உருவாக்கி வைத்திருந்ததாகவும், அது தனக்கு சொந்தமான கதை என்று ரஜினி மற்றும் கேஎஸ் ரவிக்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை குறித்த வரலாற்று சம்பவங்கள் பொதுவானது. அது என்னுடைய கதை உன்னுடைய கதை என சொல்ல முடியாது என்று ரஜினியின் தரப்பில் வாதம் வைக்கப்பட்டதுடன் அதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் ரஜினியை சுற்றி வந்தாலும் அதையெல்லாம் அவர் அசால்டாக சமாளிப்பது தான் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்