முதன் முதலாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது சுசி லீக்ஸ் பக்கத்தில் தான். அன்று முதல் இன்று வரை சுசித்ரா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சுசிலீக்ஸ் தான்.
பிரபல பாடகியான சுசித்ரா ரேடியோவிலும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
பாடகி சுசித்ரா மேடை கலைஞரும் நடிகருமான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் சுசிலீக்ஸ் பக்கம் வெளியான போது மிகவும் மன அழுத்தத்தில் இருந்த மனைவியை அனைவரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்த நிலையிலும் கூட அவருடன் துணையாக இருந்தார்.
இப்படி இருந்தவர்கள் ஏன் விவாகரத்து செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இது ஒருபுறமிருக்க சமீபத்தில் கார்த்திக்கின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்தது.
படங்களில் ஹீரோவை விட அழகாக வரும் கார்த்திக் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் நரைத்த முடியுடன் வயதான தோற்றத்தில் உள்ளார். இது சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் எனக் கூறுகின்றனர்.
சுசி லீக்ஸ் சர்ச்சைக்கு பிறகு சுசித்ராவால் கார்த்தி பல இன்னல்களுக்கு ஆளானார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. யாரடி நீ மோகினி படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.