தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது சோகமான விஷயம் என்று ஒன்று உண்டு என்றால் அது குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியின் நிறைவு தான். அந்தளவிற்கு ஒவ்வொருவருடைய மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி.
மேலும் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்ததோடு சீசன் ஒன்றை விட படு ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கனி திரு சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் முதல் சுற்றில் கனி கடைசி இடத்தை பிடித்திருந்தார்.
ஆனால் 40 மதிப்பெண்கள் கொண்ட இரண்டாவது சுற்றில் கனி தனது முழு வித்தையையும் இறக்கி ஜட்ஜ்களை பெருமளவில் இம்பிரஸ் செய்தார். ஏனென்றால் இந்த சுற்றில் இந்திய பாரம்பரிய 5 உணவு வகைகளை வெளிநாட்டு முறைப்படி செய்து நடுவர்களை மிரள வைத்தார் கனி. இதனால் அந்த சுற்றில் கனி 35 மதிப்பெண்களைப் பெற்றார்.
அதுமட்டுமில்லாமல், ‘கடந்த சீசனில் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் கொடுத்த பிரசெண்டேஷனை தூக்கி சாப்பிடும் வகையில் தாறுமாறான பிரசன்டேஷன் கொடுத்துள்ளீர்கள்’ என்ற நல்ல கமெண்ட்களையும் நடுவர்களிடமிருந்து கனி பெற்றதோடு 100க்கு 84 புள்ளிகள் பெற்று குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக வெற்றி வாகை சூடினார்.
எனவே நடுவர்கள் இடமிருந்து பயங்கரமான கமெண்டுகளை பெற்ற கனியின் சமையல் பெருமை தற்போது தமிழ்நாடெங்கும் தாறுமாறாக பேசப்பட்டு வருகிறது.