திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

என்ன செய்வதென்று பரிதவிக்கும் ஷங்கர்.. சந்தோசத்தை இழந்த மொத்த குடும்பம்

பிரம்மாண்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுத்தாலும் அதை விட பலமடங்கு லாபத்தையும் பெற்று தரும். இவருடைய இளைய மகள் அதிதி கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார்.

அதேபோல் இவருடைய மகனும் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருடன் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

இதனால் இப்போது பிரம்மாண்டமாக சென்னையில் ரிசப்ஷன் நடத்தலாம் என பல கோடி செலவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஷங்கர் இந்த ரிசப்ஷனை நிறுத்திவிட்டார். அதற்கு காரணம் அவருடைய மருமகன் ரோகித் தான்.

அதாவது ரோகித் தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். அந்தப் பெண் கொடுத்த கம்ப்ளைன்ட் இன் பெயரில் இவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விஷயம் இப்போது விஸ்வரூபம் எடுத்து ஷங்கர் குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இதனால் ஷங்கரின் மொத்த குடும்பமும் சந்தோசத்தை இழந்து தவித்து வருகின்றனர். இப்போது ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்க்கும் விவாகரத்து செய்ய ஷங்கர் குடும்பம் யோசித்து வருகின்றனர். ஆனால் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் திருமணமாகி ஆறு மாதங்களாவது ஆகி இருக்க வேண்டும்.

இதனால் சில மாதங்கள் முடிந்தவுடன் விவாகரத்திற்கு பதிவு செய்ய வேண்டும் என்ற முடிவில் ஷங்கர் குடும்பம் உள்ளனர். மேலும் ரோகித் மீது வழக்கு உள்ளதால் இவர்கள் எளிதில் விவாகரத்து கிடைத்து விடும் என்றும் கூறப்படுகிறது. திருமணமான சில மாதங்களிலேயே ஷங்கரின் மகளுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை பலருக்கும் வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -spot_img

Trending News