சினிமா நடிகைகளைப் போலவே சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. அப்படி சீரியல் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிநடை போடும் நடிகைகள் தான் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன்.
அந்த வகையில் அடுத்ததாக அளவுக்கதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தான் மகாலட்சுமி. பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அந்த நெகடிவ் எல்லாம் பாசிடிவாக மாற்றி தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் மகாலட்சுமி நடிக்கும் சீரியல்கள் அனைத்துமே நல்ல டிஆர்பி பெற்று வருகிறது. விரைவில் மகாலட்சுமி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.
முதலில் கொழுக்மொழுக் என பப்ளி ஆக இருந்த மகாலட்சுமி தற்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
அதனைத் தொடர்ந்து தற்போது மாடர்ன் உடையில் டாப் ஆங்கிள் செல்பீ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார் மகாலட்சுமி. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
இது மகாலட்சுமிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை காட்டுகிறது. மிதமான கவர்ச்சியில் அழகாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் மகாலட்சுமி.