கவர்ச்சி காடாக மாறிய சின்னத்திரை நடிகைகள்.. சீரியல்ல தான் இவங்க குடும்ப குத்து விளக்கு

இந்த வருட புத்தாண்டு தினத்தை சினிமா பிரபலங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். என்னதான் மழை கொட்டி தீர்த்தாலும் புத்தாண்டு தின கொண்டாட்டம் ரொம்பவே களை கட்டியது.

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் பலரும் தங்கள் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். அதில் சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியல் நடிகைகளின் போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் பப்லு, நிமேஷிதா, நித்யா தாஸ், ராகுல் ரவி, அக்ஷிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் சமீபத்தில் நடைபெற்ற கல்யாண எபிசோட் ரசிகர்களின் ஆர்வத்தை பெரிதும் தூண்டியது.

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் அனைவரும் இணைந்து இந்த வருட புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். சீரியலில் குடும்பப் பாங்காக வரும் இந்த நடிகைகள் அனைவரும் இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தில் கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர்.

nithyadas
nithyadas

அதில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகை நித்யா தாஸ், அவரின் மகளுடன் கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இவர்களின் கிளாமர் போஸ் எல்லாம் தாண்டி அந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் நிமேஷிதா மிகவும் இறக்கமான மேலாடை அணிந்து புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.

இவர்களின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் உங்க அடக்க ஒடுக்கம் எல்லாம் சீரியல்ல மட்டும் தானா, இருந்தாலும் இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப நல்லா இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்