விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் நாயகியாக நடித்திருந்தவர் தான் ரேஷ்மா வெங்கடேஷ். இவர் இதற்கு முன்பு யூடியூப் வீடியோக்களில் நடித்து வந்தார். அதேபோல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், பழம்பெரும் நடிகையான சாவித்திரி கெட்டப்பில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பதிவிட்டுள்ளார். மேலும், “சாவித்திரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். சாவித்திரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்திருந்ததை நினைவுபடுத்தும் விதமாக ரேஷ்மா இப்பதிவை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் பாராட்டுகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
இதேபோல், முன்னதாக ரேஷ்மா நடிகை சாவித்திரியின் பாடலான ‘வாரோயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை’ என்ற பாடலுக்கு நடித்து வெளியிட்ட வீடியோவும் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
கீர்த்தி சுரேசை விட ரேஷ்மாவிற்கு தான் நடிகை சாவித்திரி கெட்டப் பொருத்தமாக இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.