1980-90களில் கொடிகட்டி பறந்தவர் சரிதா. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என கிட்டத்தட்ட 160 படங்களில் நடித்துள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வலம் வந்துள்ளார். அதாவது முன்னணி நடிகையான நக்மா, விஜயசாந்தி, தபு, சுஷ்மிதா சென், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இவர் நடிப்புத் திறமைக்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார். கே பாலசந்தர் இவரை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிப்பில் வெளிவந்த வண்டிச்சக்கரம், அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்கள் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்றது.
அன்றைய காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்த சரிதாவும், நடிகை ஸ்ரீபிரியாவும் சேர்ந்து மாடர்ன் உடையில் வலம் வந்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.