சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சங்கவியால் கண்டபடி திட்டு வாங்கிய விஜய்.. 26 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக கிசுகிசுக்கப்பட்டவர்கள் விஜய் மற்றும் சங்கவி. ஆரம்ப காலகட்டங்களில் இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே அமைந்தது.

இதன் காரணமாகவே இருவரும் காதலித்ததாகவும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வரை இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம் என பலமுறை சங்கவி இந்த கிசுகிசுக்களுக்கு விடை கொடுத்துள்ளார்.

சங்கவி தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இருந்தே கவர்ச்சியை நம்பி சினிமாவில் களம் இறங்கியவர். அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

vijay-sangavi-cinemapettai
vijay-sangavi-cinemapettai

விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் 1995ஆம் ஆண்டு உருவான திரைப்படம் விஷ்ணு. இந்த படத்தில் விஜய் மற்றும் சங்கவி இருவரும் ஆற்றில் குளிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதில் விஜய் குளிருக்கு பயப்படுவது போலவும், சங்கவி விஜய்க்கு எப்படி ஆற்றில் குளிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பது போலவும் அந்த காட்சி எடுக்கப்பட்டது.

விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அந்த காட்சியை இயக்கிக் கொண்டிருக்கும்போது சங்கவி இயக்குனரிடம் திட்டு வாங்கி விடக்கூடாது என்பதற்காக அவர் சொல்வதைக் கேட்டு அப்படியே வேக வேகமாக நடித்து முடித்து விட்டாராம். ஆனால் விஜய், குளிரில் நடுங்கிக் கொண்டே அந்த காட்சியை நடிக்காமல் நிறைய டேக்குகள் வாங்கினாராம்.

vijay-sangavi-vishnu-movie
vijay-sangavi-vishnu-movie

இதனால் கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர், ஒரு பொண்ணே சீக்கிரம் அந்த காட்சியை நடித்துவிட்டது, உனக்கு என்ன? என அனைவர் முன்னிலையிலும் விஜய்யை திட்டி விட்டாராம். அதன் பிறகு விஜய் சங்கவியிடம் சென்று, செல்லமாக சண்டையிட்டதாக சமீபத்திய வீடியோவில் தெரிவித்துள்ளார் சங்கவி.

- Advertisement -

Trending News