Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் கிளுகிளுப்பான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் சமந்தா.. கணவனுடன் சேர்வதற்கு வாய்ப்பே இல்ல

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் சமந்தா தன் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தது திரையுலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை முடிவதற்குள்ளாகவே நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். ஓ சொல்றியா மாமா என்று தொடங்கும் அந்தப் பாடலில் அவர் ஆடிய அந்த கிளாமர் டான்ஸ் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மேலும் அந்தப் பாடல் பல சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் உருவாக்கியது. இப்படி பல எதிர்ப்புகள் இருந்தாலும் அந்தப் பாடல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து சமந்தா மீண்டும் ஒரு திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் என்ற திரைப்படத்தில் ஒரு கிளாமர் டான்ஸ் ஆடுவதற்கு சமந்தாவை படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்திய எழுத்தாளர் டைமரி முராரி எழுதியுள்ள அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் என்ற திரைப்படத்தில் தான் அவர் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் சமந்தா இரு பாலின ஈர்ப்பு உடையவராக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர் அதிக கவர்ச்சியாக ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுதான் அவரது விவாகரத்துக்கும் காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சமந்தா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top