Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பணத்துக்காக நடிக்க மாட்டேன் என சொன்ன சமந்தா செய்ற வேலையா இது.. என்னமோ போங்க ஜி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருடைய விவாகரத்து தான் இன்றுவரை ஹாட் டாபிக்காக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. காதல் கணவர் நாக சைதன்யாவைப் பிரிந்து தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் செல்லும் ஆசையும் அம்மணிக்கு வந்துவிட்டதாம்.

தற்போது படம் நடித்து பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் சமந்தா ஒரு சில மாதங்களுக்கு முன்பு சினிமாவில் பணத்துக்காக நடிக்க மாட்டேன் எனவும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது சமந்தாவின் விவகாரம்.

காசு முக்கியம் இல்லை என்று சொன்னவர் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாக சொன்னதால் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அந்த ஒரு பாடலுக்கு மட்டும் சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் சமந்தா.

அதுபோக பாலிவுட்டில் எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டுகிறேன் எனவும், நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கவும் பிரச்சனை இல்லை எனவும் கூறி அங்கு வாய்ப்புகளை வைத்துள்ளாராம். விரைவில் அங்குள்ள முன்னணி நடிகர் ஒருவரின் பட வாய்ப்பு கிடைக்கப் போவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் பணத்துக்காக செய்ய மாட்டேன் எனவும் கூறியதை பார்த்து நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறதாம் சினிமா வட்டாரம். விரைவில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு குடியேற உள்ளாராம் சமந்தா.

samantha

samantha

Continue Reading
To Top