வெண்பாவை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் கண்ணம்மா.. ஒரு எபிசோடுக்கு அள்ளிக்கொடுக்கும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அதிக ரசிகர்களைப் பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. விருவிருப்பான கதைக்களத்துடன் செல்லும் இத்தொடரில் நடிக்கும் நடிகை, நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

அருண் பிரசாத் : பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகன் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இவர் ஆரம்பத்தில் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமானார். இத்தொடரில் இவருடைய ஒரு நாள் சம்பளம் 20,000 ஆகும்.

வினுஷா தேவி : ஆரம்பத்தில் இத்தொடரின் கதாநாயகியாக மாடல் அழகி ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருந்தார். சில காரணங்களால் இத்தொடரில் அவர் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு வினிஷா தேவிக்கு கிடைத்தது. தற்போது வினுஷாதேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார். இவருக்கு 20,000 ஒரு நாள் சம்பளமாக தரப்படுகிறது.

ரூபாஸ்ரீ : தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரூபாஸ்ரீ. தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியின் அம்மா சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரூபாஸ்ரீ பாரதிகண்ணம்மா தொடரில் ஒரு நாள் சம்பளமாக 15,000 ரூபாய் பெறுகிறார்.

ரிஷிகேஷ் : சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரிஷி கேஷ். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியின் அப்பாவாக நடித்து வருகிறார். இவருடைய ஒரு நாள் சம்பளம் 12,000 ரூபாய் ஆகும்.

ஃபரினா ஆசாத் : சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை ஃபரினா. பல சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்திருந்தாலும் பாரதிகண்ணம்மா தொடரின் வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் வெண்பாவாக நடிப்பதற்கு ஒரு நாள் சம்பளமாக 10,000 ரூபாய் பெறுகிறார்.

கண்மணி : பாரதிகண்ணம்மா தொடரில் துணை நடிகையாக நடிப்பவர் நடிகை கண்மணி. கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தற்போது நேர்மறையாக கொடுக்கப்பட்டுள்ளது. கண்மணி ஒரு நாள் சம்பளமாக 9000 பாரதிகண்ணம்மா தொடரிலிருந்து பெறுகிறார்.

செந்தில்குமாரி : பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் சித்தி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் செந்தில்குமாரி. பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 5000 ரூபாய் கொடுக்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்