வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கிரிஷ் கிரைன்ஸ்சை மண்டையை சொரியவைத்த டிராவிட்.. 17 ஆண்டுகளுக்குப் பின் பரம ரகசியத்தை போட்டு உடைத்த சச்சின்

ராகுல் டிராவிட் இந்தியாவின் சுவர். டெஸ்ட் போட்டிகளில் ஒரு கட்டத்தில் இந்தியா விக்கெட் களை இழந்து வந்த நிலையிலும் சுவர் போல் இந்தியாவை காப்பாற்றுவதால் ராகுல் டிராவிட்டுக்கு “தி வால் ஆஃப் இந்தியா” என்ற ஒரு பெயர் சூட்டப்பட்டது. ஆம் சில போட்டிகளில் ஓபனிங் இறங்கி பத்தாவது விக்கெட் வரை பார்ட்னர்ஷிப் கொடுக்கும் டிராவிட்டுக்கு இந்த பெயர் பொருத்தமானது தான்.

ஒரு காலத்தில் இந்தியாவின் மும்மூர்த்திகள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி இவர்கள் மூவரும் தான் இந்தியாவின் தூண்கள். மூவரில் யாராவது ஒருவர் செஞ்சுரி போட்டு இந்தியாவை காப்பாற்றி வந்தனர். எதிரணியினர் இவர்கள் மூவரின் விக்கெட்டுகளை எடுக்க பெரிதும் பாடுபடுவார்கள்.

Also Read: மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்

இந்நிலையில்தான் 15 வருடங்களுக்குப் பின் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் சுவர் “ராகுல் ட்ராவிட்” பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். ஒரு பேட்ஸ்மேன் பௌலரை பார்த்து விளையாடாமல், ரன்னரில் இருந்த தன்னை பார்த்து விளையாடியதை பகிர்ந்துள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் தான் அந்த கலகலப்பான விஷயம் நடந்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி 2004 ஆம் ஆண்டு நடைபெற்று வந்தது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் க்ரிஷ் கிரைன்ஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். அவருடைய பந்து இன்னர் ஸ்விங் ஆகிறதா இல்லை அவுட்டர் ஸ்விங் ஆகிறதா என்பது தெரியவில்லை. அப்பொழுது ரன்னரில் நின்று கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்டிற்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

Also Read: கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்

அதாவது நான் மட்டையை, என் இடது பக்கம் வைத்திருந்தால் அது அவுட் ஸ்விங் பந்து எனவும். இடது பக்கம் வைத்திருந்தால் அது இன்ஸ்விங் எனவும் ராகுல் டிராவிட்டிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்போதுதான் ராகுல் டிராவிட் , பவுலரை பார்க்காமல் எதிரில் நின்றுகொண்டிருந்த சச்சினின் மட்டையை மட்டும் பார்த்து விலையாடிள்ளார். இது க்ரிஷ் க்ரைன்சிக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்துள்ளது.

இவர்கள் திட்டத்தை தெரிந்து கொண்ட க்ரிஷ் கிரைன்ஸ், பந்தை யாருக்கும் தெரியாதவாறு மறைத்து வைத்து ஓடி வந்துள்ளார். அப்போதும் ராகுல் டிராவிட் கணித்து பந்தை பவுண்டரிக்கு விலாசியுள்ளார். ஆடிப் போன க்ரைன்ஸ், சச்சினிடம் இதற்கு என்ன பதில் என்று கேட்டுள்ளார். எனக்கு பந்து தெரியவில்லை என்றால் நான் மட்டையை நடுவில் வைத்து இருப்பேன் என்று அதற்கு முன்னரே ராகுல் டிராவிட்டிற்கு அவர் ஐடியா கொடுத்துள்ளார்.

Also Read: முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

- Advertisement -

Trending News