ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. சினிமா சண்டை அரசியலாக்கிய சம்பவம்

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும் தங்களது சினிமா பயணத்தை கடினமான பாதைகளில் இருந்தே தொடங்கினார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த நடிகர் ஆவார்.

1980களில் நடிகர் ரஜினிகாந்தின் பெரும்பாலான திரைப்படங்கள் இவருக்கு வெற்றித் திரைப்படமாகவே அமைந்தது. இவர் திரைப்படத்தில் வரும் வசனங்களில் பல வசனம் அரசியலைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். அந்தக் காலகட்டத்தில் நடிகை ஜெயலலிதா அரசியலில் நுழைந்தார். அப்போது நடிகை ஜெயலலிதாவுக்கு, நடிகர் ரஜினி உடன் பில்லா என்ற திரைப்படத்தில் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ஜெயலலிதா, தனக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பமில்லை என்று மறுத்து விட்டார். தயாரிப்பாளர் பாலாஜி, நடிகை ஜெயலலிதாவிடம் பில்லா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தருமாறு வேண்டி கேட்டபோது கூட, வேண்டாம் என்று மறுத்து விட்டார் நடிகை ஜெயலலிதா.

அதன்பிறகுதான் பில்லா திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை ஸ்ரீபிரியா இணைந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி பேசக்கூடிய அனைத்து கருத்தும் அரசியலாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசியலில் இறங்கிய ஜெயலலிதா பல சர்ச்சைகளில் சிக்கினார். அப்போது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு நடிகர் ரஜினி எதிர்ப்பு தெரிவிப்பதாக செல்லப்பட்டது.

rajini-jj-cinemapettai
rajini-jj-cinemapettai

அதன் பிறகு ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க் கட்சியுடன் இணைந்தார் ரஜினி. அது பெரிதாக ஒன்றும் பலனளிக்கவில்லை. ஜெ.ஜெயலலிதா தனது சொந்த முயற்சியால் அரசியலில் பல சாதனைகளை படைத்தார். குறிப்பாக வீரப்பனுக்கு முடிவு கட்டினார். அதன்பின் திரையுலகிற்கு பல சலுகைகளை வாரி வழங்கினார்.

கோலிவுட் வட்டாரமே இணைந்து புரட்சித் தலைவிக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தது. அந்த மாபெரும் விழாவில் நடிகர் ரஜினி, முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை ‘தைரியலட்சுமி’ என்று புகழ்ந்தார். அரசியல் என்றதும் எதிரும் புதிருமாக இருந்த ரஜினியும் ஜெயலலிதாவும் சினிமா என்றால் கைகொடுத்தது கோலிவுட்டுக்குகே வியப்பளித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்