இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை ஷங்கரிடம் இருந்து பறித்து தற்போது தன்வசம் வைத்துள்ளவர்தான் ராஜமௌலி(Rajamouli). அந்த அளவுக்கு தன்னுடைய படங்களில் பிரம்மாண்டத்தை அள்ளித் தெளித்து வருகிறார்.
ராஜமவுலி தெலுங்கு சினிமாவில் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு பாகுபலி படங்கள் மூலம் தான் இந்திய சினிமா முழுவதும் ஒரு அடையாளம் கிடைத்தது. அதன்பிறகு அவரது ஒவ்வொரு படங்களுமே கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட் என்ற அளவில்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்ததாக உருவாக வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கும் திரைப்படம் தான் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR). இந்த படம் முழுவதும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தற்போது 900 கோடி வரை இந்தியா முழுவதும் வியாபாரம் செய்யப்பட்டு விட்டது. அதுமட்டுமில்லாமல் அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டில் வெளியாக போவதாகவும் அறிவித்து விட்டனர்.
ஆனால் தற்போது மீண்டும் கொரானா பரவல் அதிகரித்துள்ளதால் கொடுத்த காசை திருப்பிக் கேட்டு வினியோகஸ்தர்கள் ராஜமவுலியின் கழுத்தை நெரித்து வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.
பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் 1700 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் RRR படம் கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்கிற அளவுக்கு படத்தின் விளம்பரத்தை ஏத்தி அளவுக்கதிகமாக வியாபாரம் செய்தனர். ஆனால் படம் போட்ட காசை எடுக்குமா என்பதே தற்போது சந்தேகத்தில் இருப்பதால் வியாபாரத்தை பாதிக்குப் பாதி குறைக்க முயற்சி செய்கிறது விநியோகஸ்தர்கள் குழு.
இதுகுறித்து ராஜமௌலியிடம் கேட்டால் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என தயாரிப்பாளரை கைகாட்டி விட்டாராம். பட்ஜெட்டே 400 கோடி என்பதால் மேலும் 400 கோடி வசூல் செய்தால் தான் லாபம் கிடைக்கும் என தயாரிப்பு தரப்பு தற்போது பின் வாங்க மறுக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சனையை வெடித்து ராஜமௌலி அடுத்து ஷங்கர் ஆக மாறும் வாய்ப்பும் இருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் குறித்த தேதியில் படம் வருமா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
