ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலக உள்ள மற்றொரு பிரபலம்.. டிஆர்பியே அவங்களால தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சரவணனின் தங்கை பார்வதியின் கல்யாணம் பல போராட்டங்களுக்கு பிறகு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இருந்து ஒருவர் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் இத்தொடரில் கதாநாயகி சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா விலகினார். ஏனென்றால் அப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் குழந்தை பிறக்கும் சில வாரங்களுக்கு முன் இத்தொடரில் இருந்து விலகினார். அதன் பின்பு தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் நடிகை ரியா நடித்து வருகிறார்.

இப்போது அவருடைய நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்துள்ளார். இதனால் ரியா நிரந்தர சந்தியாவாக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இந்நிலையில் இத்தொடரில் இருந்த அர்ச்சனா விலகப் போவதாக தகவல் வெளியானது. அர்ச்சனா இத்தொடர் வருவதற்கு முன் விஜேவாக பணியாற்றி வந்தார்.

இவர் ராஜா ராணி தொடரில் காமெடியுடன் செய்யும் வில்லதனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. மேலும் ஹீரோயினுக்கு இணையான கதாபாத்திரமும் இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு விருது வழங்கப்பட்டது .

இந்நிலையில் அர்ச்சனா இத்தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ச்சனா பாரதிகண்ணம்மாவில் பாரதியாக நடித்த வரும் அருணை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

அர்ச்சனா கேட்டுக்கொண்டதால் அருண் பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகுவதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது அர்ச்சனாவும் சீரியலில் இருந்து விலகுவதால் ரசிகர்களுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

- Advertisement -