செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கொஞ்சம் ஹிட்டு கொடுத்தா ஓவரா ஆடும் ஹீரோக்கள்.. தயாரிப்பாளர்கள் எடுக்கும் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் எப்பொழுதும்  நிறைய புதுமுக ஹீரோக்கள், ஹீரோயின்கள் நடிகர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் சில காலமாக எந்த ஒரு புதுமுக ஹீரோக்களும் நிலைத்து நிற்கவில்லை ஒரு சில ஹீரோக்கள் படங்கள் வந்தாலும் ஒன்று இரண்டு நாளில் தியேட்டரை விட்டு ஓடி விடுகிறது.

தமிழ் சினிமாவை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் பிரித்து விடலாம்.புது ஹீரோக்கள் தமிழ் சினிமாவிற்கு வர மாட்டார்களா என  ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் சினிமா இதற்குக் காரணம் ஒரு சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தான்.

Also read: கேரவனில் அசிங்கப்படுத்திய விஜய், நயன்தாரா.. ஆணவத்தில் ஆட்டம் போடும் சினிமா பிரபலங்கள்

பிரபலமான நடிகர்களை வைத்து படம் எடுக்கலாம் என்று ,அவர்களிடம் கால் சீட் கேட்டு, கோடிகளில் சம்பளத்தை அட்வான்ஸ் தொகையை அப்போதேகொடுத்து விட வேண்டும் அவர் சொல்லும் நடிகைகள், அவர் சொல்லும் டெக்னீசியர்கள் மட்டும்தான் படத்தில் சேர்க்க வேண்டும்.

இப்படி பழைய நடிகர்கள் எல்லாம் பல கண்டிஷன்கள் போட்டு வருகின்றனர். அதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஒத்து வரவில்லை என்றால், கால்சீட் கொடுக்க மறுக்கிறார்கள். இதனாலேயே பெரிய நடிகர்கள் பக்கம் போக பயப்படுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

Also read: சமந்தாவின் வாழ்க்கையை பற்றி புட்டு புட்டு வைத்து சின்மயி.. விவாகரத்துக்கான காரணம் இதுதான்

இப்படி பல பிரச்சினைகள் இருப்பதால் சமீபகாலமாக புதுமுக ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகின்றனர். அப்படி எடுக்கும் படங்களுக்கு அனைத்து நடிகர், நடிகைகளும் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். இப்படி ஒரு கலாச்சாரம் தமிழ் சினிமாவில் உருவாகி வருகிறது.

திறமை இருக்கும் நிறைய புதுமுக நடிகர்கள் வளர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் புது இயக்குனர்கள் உருவாகி வருகின்றனர். அதனால் இனி வரும் காலங்களில் தமிழ் சினிமா வேறு ஒரு பாதையை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Also read: நயன்தாராவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்த சின்மயி.. பகிரை கிளப்பிய உண்மை

- Advertisement -

Trending News