நயன்தாராவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்த சின்மயி.. பகிரை கிளப்பிய உண்மை

நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய பலவருட காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு இணையத்தில் பலர் வாழ்த்துக்கள் குவிந்தாலும் சிலர் கேலி, கிண்டல் செய்து வந்தனர். அந்தவகையில் ஒரு மருத்துவர் நயன்தாராவை கிண்டல் செய்திருந்தார்.

அதாவது தற்போது நயன்தாராவுக்கு 37 வயதாகிறது. இந்த வயதுக்கு மேல் அவரால் எப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது போல கேலி செய்திருந்தார். அப்போது ஒரு மருத்துவர் எப்படி இப்படி சொல்லலாம் என பாடகி சின்மயி அவரை விளாசி எடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார். இவருக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து தற்போது குழந்தை பிறந்துள்ளது.

தற்போது நயன்தாராவை போல சின்மயிக்கும் 37 வயதுதான் ஆகிறது. நயன்தாராவின் அந்த விமர்சனம் வரும்போது சின்மயி கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால்தான் ஒரு மருத்துவர் நயன்தாராவை கேலி செய்யும் போது பொறுத்துக் கொள்ள முடியாமல் சின்மயி பொங்கி எழுந்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஒரு ரசிகர் சின்மயின் பதிவுக்கு கிழ் முப்பது வயதை தாண்டியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக நீங்கள் உள்ளீர்கள் என பாராட்டி இருந்தார். அதற்கு சின்மயி, 30 வயதுக்கு மேலும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

உங்களுக்கு எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்காக குழந்தையைப் பெற்றுக் கொள்ளாதீர்கள் என சின்மயி தெரிவித்துள்ளார். மேலும் சின்மயின் கர்ப்பகால புகைப்படங்கள் வெளியாகாததால் இவர் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொண்டார் என ஒரு பக்கம் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Next Story

- Advertisement -