எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு தற்போது சூட்டிங்கை நிறுத்திய விஜய் டிவி.. 3வது சீசனுக்கு வந்த சோதனை

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி ஆரம்பிக்கும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து மக்களை கவரும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாகவும், புதுமையாக இருக்கும். இதில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி கடந்த 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் நன்றாக சமைக்க தெரிந்த சினிமா பிரபலங்கள் குக்காக இருப்பார்கள். அவர்களின் சமையலை சொதப்புவதற்காக சில கோமாளிகள் இருப்பார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலை ஜாம்பவான்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்தனர்.

இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை பிரபலம் அஸ்வின் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக பிரபலமடைந்த பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் பெரிய திரையில் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி என்பதால் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 3 குறித்து ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவு பெற உள்ளதால் அதற்கு பிறகு இந் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் பொதுமக்கள் உட்பட பிரபலங்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்