வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சுடுகாட்டில் கண்ணன் செய்த செயல்.. கலங்கிப் போன பாண்டியன் ஸ்டோர் குடும்பம்!

விஜய் டிவியில் தற்போது டிஆர்பி யில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவமும், விட்டுக் கொடுத்தலும், அண்ணன் தம்பிகளின் பாசமும், மருமகள்கள் உடைய அனுசரணையும் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையை  மையமாக வைத்து தொடங்கப்பட்டது இந்த சீரியலாகும். பொதுவாகவே குடும்பம், குடும்பத்தை சார்ந்த சிரியல்கள் மக்களிடையே நன்கு பிரபலமாகும்.

அதேபோல், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஒரு வாரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ்  எபிசோடுகளில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சீரியலில் சத்திய மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் இவர்கள் நான்கு பேருடைய தாயாரான லட்சுமி அவர்கள், திடீரென்று மரணம் அடைந்து விடுகிறார்கள்.

லக்ஷ்மியின் கடைசி மகனான கண்ணன் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் புரிந்து கொள்கிறான். அந்த வேதனையை தாங்கமுடியாத லக்ஷ்மிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்த பின்பு  வீட்டிற்கு  அழைத்து வருகிறார்கள். பிறகு, அவர் பழைய நிலைமைக்கு திரும்புகிறார். அன்று இரவு அவர் உறங்க சென்றிருக்கிறார். அன்று காலை அவளது மருமகள்கள் வந்து எழுப்பும் போதே தெரிந்து இருக்கிறது, அவர்கள் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்கள் என்பது அதிர்ச்சியில் திகைத்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.

அதேசமயம் கடைசி மகனான கண்ணன் திருச்சிக்கு வேலை தேடி சென்று இருக்கிறான். அப்போது, அவனது மொபைல் போனையும் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றிருப்பதனால், அவனை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் குடும்பம் உனக்காக காத்துக்கொண்டிருந்தது ஆனால் அந்த ஊரின் பெரியவர்கள் உங்களுக்கு மாலை 6 மணி வரைக்கும் நேரம் தருகிறோம் அதன் பின் சடலத்தை இங்கு வைத்திருக்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

இவர்களும் பொறுமையோடு இருந்தார்கள். ஆனால், கண்ணன் வரவில்லை. கடைசியாக கண்ணன் வந்தான், அவன் வந்து கொண்டிருக்கும் வழியில் தனது தாயாரின் போஸ்டரில் கண்ணீர் அஞ்சலி என்று ஒட்டி வைப்பதை கண்டு அதிர்ந்து போனான். பதட்டத்துடன் ஓடி வருகையில் தனது மனைவி ஐஸ்வர்யா மரத்தின் அடியில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதை கண்டான்.

அப்போது ஐஸ்வர்யா சொன்னால் ‘உனது தாயார் இறந்து விட்டார்கள் அவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்’ என்று சொல்லி அழுது கொண்டிருந்தாள். இவன் உடணடியா  அழுது கொண்டே சுடுகாட்டிற்கு சென்றான் மூர்த்தி தனது தாயாரின் லட்சுமி உடலுக்கு தீ வைக்கும் போது சரியாக இவன் செல்லும் போதும் கண்ணனால் தனது தாயாரை பார்க்க இயலவில்லை. அவன் அம்மா அம்மா என்று அந்த இடத்திலேயே, கதறி அழுதது இவர்களது ரசிகர்களின் கண்களிலும் கண்ணீரை வரச்செய்தது.

kanan-cinemapettai
kanan-cinemapettai

என்ன ஹாஸ்பிடல்லியும் அம்மாவை பார்க்க விடல, வீட்டிலேயும் என் அம்மாவ பார்க்கவிடல இனி நான் அம்மாவை எங்க பார்ப்பேன்? எப்படி பார்ப்பேன்? என்ன பார்க்கவிடாமல் பண்ண நீங்க எல்லாம் யாரு?எனக் கேட்டு கோபத்துடன் கண்ணன் அழுதான். மறுநாள் சுடுகாட்டிற்கு சென்ற கண்ணன், அண்ணன்கள் வருவதற்கு முன்பே அவருடைய அம்மாவிற்கு பால் ஊற்றி, குடி மற்றும் மீசையை எடுத்துள்ளார். அப்போது அவர் அம்மாவை நினைத்து அழுகும் காட்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. அம்மாவைப் பார்க்க விடாமல் செய்த பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் மீது கண்ணன் கோபத்துடன் நடந்து கொள்வது கதையை வேறு வழியில் திருப்ப போவதாக ரசிகர்கள் யோகிக்கின்றனர்.

- Advertisement -

Trending News