தமிழில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜனனி. ஒரு சமயத்தில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார்.
கொரோனா ஊரடங்கு சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐடி நிறுவனங்கள் கூட வொர்க் ஃப்ரம் ஹோமில் இயங்க வந்தன. ஆனால் சினிமா நடிகர்களுக்கு அப்படியில்லை. வெளியில் ஷூட்டிங் தொடங்கினால் தான் வருமானம்.
இந்த சூழ்நிலையில் தான் பல நடிகர்கள் யூடியூப் பக்கம் தாவினார்கள். சீரியல் நடிகர்கள், நடிகைகள், ஆங்கர்கள், நகைச்சுவை நடிகர்கள் என எல்லோரும் யூடியூப்பில் சேனல் தொடங்கி அதிலும் வருமானத்தை ஈட்டத் தொடங்கினர்.
இன்னும் வேறு சிலர் சொந்தமாக பிசினஸ் செய்யவும் தொடங்கினர். அதில் ஒருவர் தான் நடிகை ஜனனி. இவர், லாக்டவுன் காலத்தில் ஃபேஷன் இணையதளம் ஒன்றைத் தொடங்கி தனது அக்காவுடன் சேர்ந்து ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.
இயல்பாகவே ஜனனியின் டிரெஸ்ஸிங் சென்ஸ் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்ததால், அதையே பிசினஸாக மாற்றி உள்ளார் ஜனனி. தற்போது The Hazel Avenue என்ற பெயரில் ஆன்லைன் தளம் தொடங்கி அதன் மூலம் ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.
இவரிடம் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இருந்து டிசைனர்களிடம் தனித்துவமான ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கி, விற்பனை செய்கிறார்கள். இவர்களின் ரெகுலர் கஸ்டமர்ஸ் பிரியா பவானி சங்கர், அதுல்யா உட்பட இன்னும் சிலர்.
பட வாய்ப்புகள் கிடைக்காததால் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் நடிகைகளுக்கு மத்தியில் வியாபாரத்தில் இறங்கிய ஜனனிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.