டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பு.. ஆனா அவார்டு கொடுக்காமல் அரசியல் செய்த விஜய் டிவி

ஒவ்வொரு வருடமும் விஜய் டிவி சின்னத்திரை நடிகர், நடிகைகளை கௌரவிக்கும் விதத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கும். அந்தவகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழாவில் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியலுக்கு சிறந்த நடிகர், நடிகை விருதுகள் எதுவும் வழங்காத்து சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ஏனென்றால் எப்பொழுதுமே விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு சிறந்த சீரியல் என்ற விருதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் இந்த சீரியலில் நடித்த கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன் விலகாமல் இருந்தால் நிச்சயம் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்திருக்கும். ஆனால் அவர் விலகி அவருக்கு பதில் கண்ணம்மாவாக வினுஷா தேவி சில நாட்களாகத் தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதால் அவருக்கு இந்த விருது கிடைக்க வாய்ப்பில்லை.

இருப்பினும் தொடக்கத்திலிருந்தே பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதால், அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுத்திருக்கலாம்.

இப்படி பாரதிகண்ணம்மா சீரியலுக்கு எந்த விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கும் லிஷா, ரக்ஷா இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது மட்டுமே கிடைத்திருக்கிறது.

அத்துடன் சிறந்த புதுமுக கண்டுபிடிப்பு என்பதில் பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி வினுஷா தேவி பெற்றிருக்கிறார். மேலும் பெரும்பாலான விருதுகள் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்