நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகர் ஏகே … பிராடு சிட்டிசன் அஜித் என்னும் ஹாஸ்டேக் டிரண்ட்

நடிகர் அஜித்திற்கு எதிராக #பிராடுசிட்டிசன்அஜித் என்னும் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இப்போது இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளது. அஜித் லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு ஹாஷ்டாக் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் நடிகர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டைகள் எப்போதுமே ஓய்ந்ததில்லை. திடீரென்று ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி கொண்டிருப்பார்கள். அடிக்கடி இது போன்று ஹாஷ்டாக்கும் ட்ரெண்டாகி கொண்டிருக்கும்.

Also Read: கொஞ்சம் கூட மதிக்காத அஜித்.. மொத்த வித்தையையும் பாலிவுட்டில் களமிறக்கி வெற்றி பெற்ற இயக்குனர்

வலிமை திரைப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் H. வினோத்துடன் இணைந்து புதிய படத்தில் கைகோர்த்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போது பிரேக் டைமில் அஜித் பைக்கிலேயே லடாக் மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் BMW பைக்கை வரவழைத்து அந்த பைக்கில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த ட்ரிப்பில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியர் மற்றும் அவருடைய உதவியாளரும் சென்று இருக்கின்றனர் . இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

Also Read: ரகசியமாக வைக்கப்பட்ட ஏகே 61 பட டைட்டில்.. இந்த ரெண்டில் ஒன்றை லாக் செய்யும் வினோத்

இந்த புகைப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர் மற்றும் குழுவினர் பைக்குடன் நிற்கும் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தில் உள்ள அஜித்தின் பைக் நம்பரை இணையதளத்தில் சர்ச் செய்து அவருடைய பைக்குக்கான இன்சூரன்ஸ் முடிவு தேதியை கண்டுபிடித்து இருக்கின்றனர்.

அஜித் பைக்கின் இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதாகவும், இன்சூரன்ஸ் காலாவதி ஆன பைக்கை ஓட்டும் அஜித் பிராடு என்றும், #பிராடுசிட்டிசன்அஜித் என்னும் ஹாஷ்டாக்கும் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள். இதற்கு அஜித் ரசிகர்களின் பதிலடி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

Also Read: அஜித்துக்கு பயத்தை காட்டிய சினிஉலகம்.. ஈகோவை விட்டு இறங்கி வரும் ராஜதந்திரம்

Next Story

- Advertisement -