கொஞ்சம் கூட மதிக்காத அஜித்.. மொத்த வித்தையையும் பாலிவுட்டில் களமிறக்கி வெற்றி பெற்ற இயக்குனர்

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன். இவர் 2003ஆம் ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2005 இல் அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கி ஆர்யாவை அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் தான், இவரது ஃபிலிம் மேக்கிங் மற்றும் கேங்ஸ்டர் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி மக்களிடம் சேர்த்தார். அதிலிருந்து இவர் மேல் தமிழ் சினிமாவிற்கு மரியாதை உருவாகியது. பின்னர் பட்டியல் என்ற படத்தை கொடுத்தார் இதுவும் கேங்கஸ்டர் சம்பந்தப்பட்ட கதை.

இதுவரை நல்ல இயக்குனர் என்ற பெயர் பெற்ற விஷ்ணுவர்தன் 2007இல் அஜித்தை வைத்து பில்லா என்ற திரைப்படத்தை இயக்கி முக்கிய இயக்குனராக அறியப்பட்டார். இந்த படம் அஜித்திற்கும் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அடுத்து அஜித்தை வைத்து ஆரம்பம் திரைப்படத்தை கொடுத்தார். பின்னர் அஜித்தை வைத்து எடுக்க முயற்சி செய்து இன்று வரை தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்காமல் இருந்து வருகிறார்.

Also Read: அஜித்துக்கு பயத்தை காட்டிய சினிஉலகம்.. ஈகோவை விட்டு இறங்கி வரும் ராஜதந்திரம் 

இவர் தற்போது பாலிவுட்டில் ஷேர்ஷா என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.இந்த படத்தின் தொடக்கத்தில் அஜித் இவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். இந்த படம் கார்கில் போர் கேப்டன் விக்ரம் பாத்ரா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கொடுத்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மிடுக்கான ராணுவ வீரராக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்திற்கான சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதினை விஷ்ணுவர்தன் பெற்றுள்ளார். தன் முதல் பாலிவுட் படத்திலேயே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் கதாநாயகனின் நடிப்பும் மற்றும் திரைக்கதை மற்றும் போர் சம்பந்தமான காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி வேற லெவலாக இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த விருது எளிதாக கிடைத்துள்ளது.

Also Read: ஒரு வாய் சோறு போட மாட்டாரா அஜித்.? எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசிய பிரபலம்

இவரின் படங்களில் தன் குருநாதர் சாயல்கள் அழகாக தெரியும். விஷ்ணுவர்தன் மணிரத்தினம், ராம்கோபால் வர்மா, சந்தோஷ் சிவன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதனால் இவரது திரைப்படம் மிகவும் நேர்த்தியாக இருக்கும். பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து முதல் படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதினை வாங்கியது மற்ற இயக்குனர்களுக்கு ஆச்சரியமளிக்கிறது.

தமிழில் நீண்ட வருடங்களாக படம் எடுக்காமல் இருக்கிறார் அதற்கு காரணம் இவர் கனவு திரைப்படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்பதே அதற்காக காத்திருப்பதால் கடைசிவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஜித்தின் நட்பு இவருடன் இன்று வரை நல்ல உறவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் சோர்ந்து போகாமல் பாலிவுட்டில் கலக்கி வருகிறார் நம் தமிழ் இயக்குனர் விஷ்ணுவர்தன் என்பதில் பெருமிதம் கொள்ளும் கோலிவுட்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்