fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

4 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் மிஷ்கின் பட நடிகர்.. அதுவும் நயன்தாரா படத்தில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் மிஷ்கின் பட நடிகர்.. அதுவும் நயன்தாரா படத்தில்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் நடராஜன். முன்னணி இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டைப் பெற்றது.

இதனை தொடர்ந்து வழக்கு எண் 18/9, வில்லம்பு மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல் இந்த படங்கள் அனைத்துமே வித்யாசமான கதைக் களங்களை கொண்டிருந்ததால் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்ரீ சாதாரண மசாலா படங்களை தவிர்த்து இதுபோன்ற வித்தியாசமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் அதன்பின் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஸ்ரீ போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதிலும் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பின் ஸ்ரீயை எந்த ஒரு மீடியாவிலும் தற்போது வரை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது ஸ்ரீ பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்குகிறார்.

shree

shree

எனவே இப்படம் மூலம் நடிகர் ஸ்ரீ நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறார். ஸ்ரீ ஒரு நல்ல நடிகர் தான். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லையா? அல்லது கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லையா? என்பது தெரியவில்லை. இருப்பினும் இப்படம் மூலமாக அவர் தனது திறமையை நிரூபித்து காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top