கடை திறப்பு விழாவில் அசிங்கப்படும் கதிர்.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் சக்களத்தி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் புதிதாக ஹோட்டல் கடை ஒன்றை துவங்கி அதை இன்று திறக்கின்றனர்.

அதற்காக அத்தனை ஏற்பாடுகளையும் செய்த கதிர், கடை திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வரும் என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். ஆனால் முல்லை உடைய அப்பா, அம்மா இருவர் மட்டுமே கடைத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து அழையா விருந்தாளியாக முல்லையின் அக்காவும் வந்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியேற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கடைத் திறப்பு விழாவிற்கு வர மாட்டார்கள் என முல்லையின் அக்கா மற்றும் அம்மா இருவரும் கதிரை குத்தலான பேசி அவமானப்படுத்துகிறார்கள்.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வரவில்லையே என வருத்தத்தில் இருந்த கதிரிடம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் முல்லையின் அக்கா மேற்கொண்டு பேசி காயப் படுத்துகிறார். மேலும் அவர் கொடுக்கும் பணத்தையும் கதிர் வாங்க மறுக்கிறார்.

5 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்த பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கதிர்-முல்லை இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். இதைப் புரிந்து கொள்ளாத முல்லையின் அக்கா மற்றும் அம்மா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை திட்டி தீர்க்கின்றனர்.

மறுபுறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கதிர் உடைய கடை திறப்பு விழாவிற்கு வர நினைக்கின்றனர். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் மீது கோபத்தில் இருக்கும் மூர்த்தி, தனம் உள்ளிட்ட அனைவரும் எப்படி அந்த விழாவிற்கு போவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதன் பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடைக்கு கிளம்பிய பிறகு மூர்த்தி மட்டும் கதிரின் கடை திறப்பு விழாவை ஓரமாக ஒளிந்து இருந்த பார்ப்பதுடன், ஒரு குழந்தையிடம் காசை கொடுத்து புதிதாக துவங்கியிருக்கும் ஹோட்டலுக்கு முதல் வியாபாரத்தை அவர் கையால் மறைமுகமாக வாங்குகிறார்.

இதை எப்படியோ தெரிந்துகொண்ட கதிர், அந்தக் குழந்தையிடம் கூடுதல் உணவு பொட்டலங்களை கொடுத்து அனுப்புகிறார். அதை மறுக்காமல் மூர்த்தியும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று கயல் பாப்பா உள்ளிட்டோருடன் பகிர்ந்து சந்தோசமாக சாப்பிடுகிறார்.

நிச்சயம் கதிர் ஹோட்டல் தொழில் மூலம் நல்ல நிலைமைக்கு வருவார் என்று கதிரை மனதார மூர்த்தி வாழ்த்துகிறார். இப்படி பாசமாக இருக்கும் நான்கு அண்ணன் தம்பிகள் சிதறிக் கிடந்தாலும் அவர்களது பாசம் துளியளவு கூட குறையாது என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் காண்பித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்