அதிக வசூலை வாரி குவித்த எம்ஜிஆரின் முதல் படம்.. 70-களிலேயே வேட்டையாடிய கலெக்ஷன்

60, 70-களில் தமிழ் சினிமாவை தாங்கிப் பிடித்ததும் என்றால் அது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி தான். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். அந்த அளவிற்கு தங்களையே சினிமாவிற்கு அர்ப்பணித்தவர்கள்.

அதுமட்டுமின்றி போட்டி போட்டு எம்ஜிஆர், சிவாஜி இருவரும் படங்களில் நடித்து வெற்றி பெற்றார்கள். அப்படி இருவரும் நடித்த காலத்தில் யார் படங்கள் அதிகமான வசூலை பெற்றுத்தரும் என்பதில் ஒரு பெரிய போட்டியே உண்டாகியது. இதுவரை எம்ஜிஆர் மட்டுமே அந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

Also Read: எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை

அதிலும் எம்ஜிஆர் நடிப்பில் அதிக வசூலை வாரிக்கவித்த முதல் படம் என்ற பெருமையை 1973 ஆம் ஆண்டு அவரே தயாரித்து இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படம் பெற்றது. இந்த படம் 70களில் வெளியான மற்ற படங்களின் கலெக்சனை எல்லாம் தும்சம் செய்ததுடன் சென்னையில் மட்டுமே 13 லட்சங்களை வசூலித்தது

அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வாலிபம் மொத்தமாக 25 லட்சங்கள் வசூலித்து வரலாற்று சாதனை படைத்தது. இந்த படத்தில் முருகன், விஞ்ஞானி ராஜு என்கின்ற ஜெயராஜ் என இரட்டை படத்தில் எம்ஜிஆர்  நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக விமலா என்ற கதாபாத்திரத்தில் மஞ்சுளாவும், லில்லி என்ற கதாபாத்திரத்தில் லதாவும் இணைந்து நடித்திருப்பார்கள்.

Also Read: 6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

இவர்களுடன் எம்ஜி சக்கரபாணி, எம்என் நம்பியார், மனோகர், நாகேஷ், அசோகன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படம் மட்டுமல்ல இந்த படத்திற்கு இசையமைத்த ம.சு. விசுவநாதன் இசையில் வெளியான 10 பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

அத்துடன் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் வெற்றியாக ரசிகர்கள் பார்த்தது என்னவென்றால், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஜப்பானில் படமாக்கப்பட்டது தான். அத்துடன் இந்தப் படம் வெளியான சமயத்தில் அப்போதைய ஆளும் கட்சி சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், எம்ஜிஆர் இந்த படத்திற்கு சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரப்படுத்தி படத்தின் வசூலில் பின்னி பெடல் எடுத்தார்.

Also Read: எம்ஜிஆரின் திடீர் மரணம், பரிதவித்த ஜெயலலிதா.. 35 வருடங்களுக்கு முன் ரஜினி செய்த உதவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்