எம்ஜிஆரின் திடீர் மரணம், பரிதவித்த ஜெயலலிதா.. 35 வருடங்களுக்கு முன் ரஜினி செய்த உதவி

சினிமா, அரசியல் என்று இரண்டிலும் தன் முத்திரையை பதித்த எம்ஜிஆர் இன்றைய தலைமுறைகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையுடன் வலம் வந்தவர் தான் ஜெயலலிதா. இவர்கள் இருவர் குறித்தும் அந்த காலத்திலிருந்து பல்வேறு விதமான சர்ச்சையான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

இப்போதும் கூட அவர்கள் இருவருக்கும் இடையே இருந்தது நட்பா இல்லை வேறு மாதிரியான உறவா என்ற விவாதம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்போது எம்ஜிஆர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த சமயம் அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்தான் ஜெயலலிதா. ஆனால் அவரை சக நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் பிடிக்காமல் இருந்தது.

Also read: ரஜினியை தன் பாணியில் மிரட்டி பணிய வைத்த கேப்டன்.. பதறிப் போய் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார்

ஆனால் அவர்கள் எம்ஜிஆர்க்கு பயந்து அதை எப்போதும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை. அப்படிப்பட்டவர்கள் புரட்சித்தலைவரின் மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதிருந்த தங்கள் கோபத்தை வெளிப்படையாக காட்ட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் எம்ஜிஆர் இறந்த நாளன்று அவருடைய உடலை பார்க்க கூட ஜெயலலிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் எப்படியாவது தலைவரின் உடலை பார்த்தே தீருவேன் என்று முடிவு செய்த ஜெயலலிதா அவருடைய இல்லம் நோக்கி சென்றார் அப்போது கதவுகள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் கதவை உடைத்து கொண்டாவது செல்ல வேண்டும் என்று ஜெயலலிதா முயற்சி செய்திருக்கிறார். அதன்படி அவர்களுடைய கார் அதிவேகத்தில் கதவை உடைக்க முற்பட்டது.

Also read: அப்பமே எம்ஜிஆர், விஜயகாந்த் திருப்பி அடித்த ரீவிட்.. விஜய்யை தூண்டும் மோசமான தொடர் தொந்தரவுகள்

ஆனால் அந்த சமயம் அங்கிருந்தவர்கள் கதவை திறந்து அவருக்கு வழி விட்டு இருக்கின்றனர். இருப்பினும் ஜெயலலிதா வீட்டின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பொழுது அங்கு இருந்த ரஜினி தான் பாவம் அந்த அம்மாவை உள்ளே விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு ஜெயலலிதாவும் உள்ளே சென்று எம்ஜிஆரின் உடலை பார்த்து இருக்கிறார்.

இந்த சம்பவம் நடந்த பொழுது ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் உடன் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தை பற்றி தற்போது சசிகலா ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த நாளன்று நான் எங்களுக்கு உதவி செய்த அந்த நபர் யார் என்று திரும்பிப் பார்த்தேன். அப்பொழுது ரஜினி தான் எங்களுக்காக பேசிக் கொண்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். இத்தனை வருடங்களுக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: ரஜினி, கமல் தயக்கமின்றி எல்லாத்தையும் பேசக்கூடிய ஒரே மனிதர்.. சகலகலா வல்லவனாக இருந்த பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்