பணம் இருந்தும் உதவ முடியாமல் போன எம்ஜிஆர், சிவாஜி.. வேதனையுடன் மரணித்த சாவித்திரி

ஒரு காலத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், திறமையாலும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவருடைய புகழ் இன்றும் கூட தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறது. சமீபத்தில் கூட இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அப்படிப்பட்ட புகழின் உச்சியில் இருந்த இவரின் இறுதி காலம் சொல்ல முடியாத வேதனையுடன் முடிந்தது.

காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினிகணேசனை உயிருக்கு உயிராக காதலித்த சாவித்திரி அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிந்தும் கூட அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது அவருக்கு வயது வெறும் 17 மட்டும்தான்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கை பல சிக்கல்களை சந்தித்தது. சாவித்திரியின் வெகுளியான குணத்தை பயன்படுத்திக் கொண்ட பலர் அவரை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாவித்திரி குடிக்கு அடிமையாகி தன் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டார். அதன் விளைவாக அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்தும் கூட பலனளிக்காமல் போனது.

பொருளாதார ரீதியாக அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் மருத்துவர் ரீதியாக அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. அவருடைய உடல் நிலையும் டிரீட்மென்ட்டுக்கு ஒத்துழைக்க முடியாத நிலையில் இருந்தது. இருந்தாலும் அப்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் சாவித்திரிக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்தனர்.

அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவரை அடிக்கடி சந்திப்பது, சாவித்திரியை பார்த்து ஆறுதல் கூறுவது என்று அவர்கள் ரொம்பவும் சப்போர்ட்டாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் விதி அவரை 19 மாதங்கள் கோமாவில் தள்ளிவிட்டது.

அழகு பதுமையாக இருந்த அவர் ஆள் அடையாளமே தெரியாமல் உருமாறி தன் மரணத்தை எட்டினார். இந்த செய்தி அப்போது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்வடைய செய்தது. தன்னுடைய நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த சாவித்திரி தன்னுடைய 46 வது வயதில் உயிரிழந்தார். ஆனாலும் இப்போதும் கூட அவர் இன்றைய நடிகைகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்