2 லட்சத்தை தொலைத்து 5 லட்சத்தை சம்பாதித்த மணிமேகலை.. இப்படியும் சம்பாதிக்கலாமா?

சன் மியூசிக்கில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மணிமேகலை. இந்த தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார். இதைதொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலனான நடன இயக்குனர் ஹூசைனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் மணிமேகலைக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மணிமேகலை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். மேலும் கடந்த மூன்று சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் பலரும் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கினர். அந்தவகையில் மணிமேகலையும் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இந்த சேனல் மூலம் இலட்சக்கணக்கில் வருமானமும் பெற்று வருகிறார்.

சமீபகாலமாக விலை உயர்ந்த கார் மற்றும் வீடு கட்ட இடம் என வாங்கி குவித்து வந்த மணிமேகலை சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டின் முன் நின்ற எங்களுடைய சொந்தமான பைக்கை காணவில்லை என்ற செய்தியை ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.

மேலும் அந்த பைக் எங்களுக்கு திருமணமான பின் பணம் இல்லாதபோது சிறுகச்சிறுக சேமித்து ஆசையாய் வாங்கிய முதல் பைக் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த பைக்கை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர் என்று போலீஸில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்ற வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மணிமேகலை தன்னுடைய பைக் காணவில்லை என்ற சோகத்தில் இருந்தார். அப்போது பாலா, 2 லட்சம் பைக் காணவில்லை என்ற வீடியோவை போட்டு மணிமேகலை அதன் மூலம் யூடியூபில் 5 லட்சம் சம்பாதித்துள்ளார் என கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -