25 படங்களில் தொடர் தோல்வி.. திறமை இருந்தும் ஜெயிக்க முடியாத வாரிசு நடிகரின் அதிரடி முடிவு

2003 ஆம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் இளம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த ஜீவா, பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மகன். இருப்பினும் ஜீவா அடுத்தடுத்த படங்களில் தன்னைத்தானே வருத்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றார்.

சினிமாவில் ஜீவா வளர்ந்த அளவுக்கு கூட அவருடைய அண்ணன் ரமேஷ்-ஆல் வர முடியவில்லை. இருப்பினும் டாப் ஹீரோவாக மாறத் துடிக்கும் ஜீவா இதுவரை நடித்த படங்களில் எல்லாம் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சிக்கிறார்.

Also Read: தியேட்டரில் கதறவிட்ட ஜீவாவின் 5 மோசமான படங்கள்.. அட்வான்ஸ் கூட வேண்டாம் என தெரிந்த ஓடும் தயாரிப்பாளர்

இருப்பினும் டாப் கதாநாயகனாக வர முடியவில்லை. அவர் கடைசியாக கதாநாயகன் நடித்த கோ 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த படமே அவருக்கு கிடைத்த கடைசி வெற்றி. அதன்பின் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் படம் வெற்றி.

ஆனால் அதில் அவர் கதாநாயகன் இல்லை. விஜய் தான் ஹீரோவாக அதில் நடித்திருப்பார். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் துணை நடிகர்களாக நடித்திருப்பார்கள். இதன்பின் 2013 இல் வெளிவந்த என்றென்றும் புன்னகை அவருக்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது.

Also Read: ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

அதிலும் அவர் முக்கியமானவராக இருக்க மாட்டார். இவருடன் இந்தப் படத்தில் வினய் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படி சுமார் 12 வருடங்களாகவே தொடர்ந்து 25 படங்களுக்கு மேல் இன்று வரை வெறும் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்து தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்காத நிலையில் இருந்து வருகிறார்.

இனிமேல் இரண்டு கதாநாயகர்களின் ஒருவராக அல்லது படத்தை தயாரித்து மற்ற ஹீரோகளுக்கு வழி விடப் போகிறாரா என்று தெரியவில்லை. எவ்வளவுதான் அடி வாங்குறது போதும்டா சாமி என கடைசியில் இந்த இரண்டு முடிவில் ஒன்றுக்கு தான் ஜீவா எடுக்கப்போகிறார்.

Also Read: ஜீவா கேரியரை சோலி முடித்த 6 படங்கள்.. பத்து வருஷமா விழுந்த அடியால் மீள முடியாத நிலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்